யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

ஆடு மேய்த்து கொண்டிருக்கும் நபர்!!!

ஆடு மேய்த்து கொண்டிருக்கும் நபர்!!!

இரண்டு மனிதர்கள் வந்து கேட்டார்கள்!!!

உன் மந்தையில் இருக்கும் ஓர் ஆட்டை 200 ரியாலுக்கு கொடுத்து விட்டு உன் எஜமானரிடம் ஆடு தொலைத்து போய்விட்டது என்று கூறி அந்த பணத்தை நீ வைத்து கொள் என்று கூறினார்கள்!!!

அந்த ஆடு மேய்க்கும் மனிதர் கூறினார் 200000 ரியாலை கொடுத்தாலும் நான் இந்த ஆட்டை கொடுக்க மாட்டேன்!!நான் கொடுக்க வேண்டும் என்றால்!!! வானமும் பூமியும் ஒன்றாக வேண்டும்!! அது நடக்கதல்லவா??அப்படி என்றால் கொடுக்க மாட்டேன்!!

ஏன்!! யாரும் தான் உன்னை பார்க்கவில்லையே ??

அந்த ஆடு மேய்க்கும் அந்த மனிதர் கூறினார் ஏன் யாரும் பார்க்கவில்லை ??அல்லாஹ் பார்த்து கொண்டிருகின்றான் என்று!!!

---------------------
இது போன்றே ஓர் நிகழ்வு 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக ஓர் நபி தோழருடைய வாழ்விலும்!!!
---------------------

இப்னு உமர்(ரலி) அவர்கள் ஒரு முறை இது போன்று ஆடு மேய்க்கும் ஓர் சிறுவனை சோதித்தார்கள்!!!

ஒரு ஆட்டை கொடுத்து விடு உன் எஜமானரிடம் ஆட்டை ஓநாய் தின்று விட்டது!!!என்று கூறி விடு என்று கூறினார்கள்!!!

அந்த சிறுவன் கூறினார்: எஜமானரிடம் ஆட்டை ஓநாய் தின்று விட்டது என்று கூறுகின்றேன் ஆனால் அல்லாஹ்விடத்தில் என்ன கூறுவது????

இந்த வார்த்தையை கேட்ட உடன் இப்னு உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள்!!!

____________________

இந்த வார்த்தையை உச்சரிக்கும் மனிதர்கள் இந்த பூமியில் வாழும் வரை அல்லாஹ்வின் அருள் இந்த பூமியில் நிலைத்திருக்கும்!!!

செல்வம்,வசதியான வாழ்க்கை இருந்தும் அல்லாஹ்வை மறந்து வாழும் நம்மை போன்ற மனிதர்களுக்கு இவர்களின் வாழ்க்கையில் படிப்பினைகள் இருக்கின்றது!!!
_________________________

இதோ உலகத்தில் ஏழையாக இருந்தாலும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்விடத்தில் இந்த மனிதர் தான் ஈமானை சுமக்கும் செல்வந்தர்!!!

http://www.youtube.com/watch?v=4q3NfD7_OdU









உலர்மலர் தொழில்நுட்பம்

உலர்மலர் தொழில்நுட்பம்



உலர் மலர்கள்:


       பலவகை வண்ணங்களையும் நறுமணங்களையும் கொண்ட உலர் மலர்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தாவர பாகங்கள் வீட்டுக்கு அழகும் புத்துணர்ச்சியும் தருகின்றன. வருடங்கள் வரை பல மதிப்புகூட்டும் தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.
உலர் மலர் தொழிற்சாலைகள் இந்தியா முழுவதும் தமிழகத்தில் பரவலாகவும் காணப்படுகின்றன. தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகள் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, சென்னையில் இயங்கிவருகின்றன.
உலர்மலர் தொழில்நுட்பம்:


         தனித்தன்மையும் வடிவமும் அழகும் கொண்ட காய்ந்த தாவர பாகங்களான இலைகள், பூக்கள், விதைகள், மரப்பட்டைகள், பூஞ்சாணங்கள் பல வகை தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட காய்ந்த தாவர பாகங்கள் பல வகை உலர் மலர் தொழில்நுட்பங்கள் (உலரவைத்தல், நிறம் நீக்குதல் மற்றும் சாயம் ஏற்றுதல்) மூலம் பதப்படுத்தப்படுகின்றன.
வகைகள்:


வீட்டு அலங்காரப் பொருட்கள்: மேஜை, ஜாடி அலங்காரங்கள், மலர் வளையங்கள், மாலைகள், தோரணங்கள், சுவர் அலங்காரங்கள், சிறு மரங்கள், வாழ்த்து அட்டைகள்.

வீட்டு நறுமணப் பொருட்கள்:


              உலர் மலர்கள் கொண்ட நறுமணக்கலவைகள் (பாட்புரி) நறுமணப்பைகள், வாசனைத் திரவியங்களை வெளியிடும் கருவிகள், தைலங்கள். உலர் மலர்களை கடல்வழிப்பயணம் மூலம் போக்குவரத்து செய்யலாம். ஆனால் கொய்மலர்களை துரிதப் போக்குவரத்து மூலமாக மட்டுமே அனுப்பலாம். இத்தொழிலை சிறு தொழிலாக சுயஉதவி குழு பெண்கள் செய்யலாம்.


               மூலப்பொருட்கள் சேமிப்பின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.70-80 வருவாய் ஈட்டலாம். மதிப்புக் கூட்டு தொழில்நுட்பங்கள் மூலம் சுமார் ரூ.100-150 வரை நாள் ஒன்றுக்கு பெறலாம். அலங்காரப் பொருட்களைச் செய்ய தேவையான அங்கங்களின் மற்றும் துணைப் பொருட்களைத் தயாரித்தல் மூலம் சுமார் 180-200 ரூபாய் வரை நாள் ஒன்றுக்கு பெறலாம். முழு அலங்கார பொருட்களைச் செய்து தருவதன் மூலம் அல்லது நேரடியாக கொள்முதல் செய்வதன்மூலம் ரூ.300 முதல் 500 வரை ஈட்டலாம்.