ஆடுகளின் எடை அதிகரிப்பதற்கும், குட்டிகளில் இறப்பை தவிர்க்கவும் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம்.
குடற்புழு நீக்க அட்டவணை
ஆடுகளின் வயது
|
பரிந்துரைகள்
|
2வது மாதம்
|
நாடாப்புழுக்களுக்கான மருந்து
|
3வது மாதம்
|
நாடாப்புழுக்களுக்கான மருந்து
|
4வது மாதம்
|
நாடாப்புழுக்களுக்கான மருந்து
|
5வது மாதம்
|
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
|
6வது மாதம்
|
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
|
9வது மாதம்
|
உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
|
12வது மாதம்
|
தட்டைப் புழுக்களுக்கான மருந்து
|
ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.
மாதம்
|
பரிந்துரைகள்
|
ஜனவரி - மார்ச்
|
தட்டைப்புழுவிற்கான மருந்து
|
ஏப்ரல் - ஜீன்
|
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
|
ஜீலை - செப்டம்பர்
|
தட்டைப் புழுவிற்கான மருந்து
|
அக்டோபர் - டிசம்பர்
|
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
|
ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை.
- ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
- தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
- அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
- மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
- குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
- குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
- தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.