செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கான கொட்டகையமைப்பு
பொது அனுமானங்கள்
Low cost house Open type housing with run space
Sheep in open space Fodder Cultivation near by shed
மிதமான உற்பத்தி திறனுக்கு, குறைந்த செலவிலான, கட்டுமான பொருட்களை கொண்டு சாதாரண கொட்டகை அமைத்தல்.
அதிக மழை பெய்யும் இடங்களைத் தவிர, நாட்டின் பிற இடங்களில் மண் தரையிலான கொட்டகையே ஏற்றது.
தண்ணீர் தேங்குவதை தவிர்க்க மேடான பகுதிகளில் கொட்டகை அமைத்தல் வேண்டும்.
வளரும் ஆடுகளின் தீவனத் தேவைக்கு கொட்டகையை சுற்றிலும் பசுந்தீவன மரங்களை வளர்த்தல்.
ஆடுகளுக்கு தூய்மையான குடிநீரை கிடைக்கச் செய்தல்.
நுல்ல காற்றோட்டமான அமைப்புடன் கொட்டகை அமைத்தல்.
கொட்டகையின் தரையானது நல்ல கெட்டியான முறையில் தண்ணீரை உறிஞ்சும் வகையில் இருத்தல் வேண்டும். தரையை எளிதில் சுத்தம் செய்வதற்கு உகந்தவாறு அமைத்தல் நல்லது.
பராமரிப்பு முறைக்கு ஏற்றவாறு கொட்டகைகளை அமைத்தல் வேண்டும்.
திறந்த நடைவழி பகுதி மற்றும் கூரை அமைக்கப்பட்ட பகுதிகள் கொண்ட திறந்த வெளி கொட்டகை சிறந்தது.
நடைவழி பகுதியை கட்டு கம்பி கொண்டு சுற்நி அமைத்தல் நல்லது.
இரவு மற்றும் மழை காலங்களில் தங்குவதற்கு உகந்த கொட்டகையமைப்பு அவசியமாகும்.
காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் கொண்ட கிழக்கு , மேற்கு திசையில் அகலப்பகுதி இருக்குமாறு அமைத்தால் தரையானது நன்கு காய்ந்திருக்கும்.
குறைந்த செலவு மற்றும் தாங்கும் திறன் கொண்ட தென்னை மற்றும் பனை ஓலையிலான கூரை மிகவும் சிறந்தது.
அதிக தாங்கும் திறன் மற்றும் பழுது பார்க்கும் செலவுகளை குறைக்கவல்ல ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் பெரிய பண்ணைகளுக்கு ஏற்றது.
சிறிய கொட்டகைகளுக்கு சாய்வான கூரைகளே சிறந்தது.
காலை நேரங்களில் மேய்ச்சலுக்கும் இரவு நேரங்களில் கொட்டகைகுன்றம் வளர்க்கப்படும். ஆடுகளுக்கு கூரை வேயப்பட்ட இடவசதியே போதமானது.
கூரை பகுதி மற்றும் திறந்த வெளி நடை பகுதி கொண்ட கொட்டகையமைப்பு தீவிர முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு உகந்தது.
கொட்டகையமைப்பின் அகலப்பகுதியானது 8 முதல் 12 மீட்டருக்கு மிகாமல் இருக்குமாறு அமைத்தலும், நீளப்பகுதியானது ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கட்டுபாடின்றி அமைத்துக் கொள்ளலாம்.
கூரையின் நடுப்பகுதியின் உயரம் 3.5 மீட்டராகவும், பக்கவாட்டு பகுதியின் உயரம் 2.5 மீட்டராக இருத்தல் நல்லது.
கொட்டகையை சுற்றி அமைக்கப்படும் கட்டுக் கம்பி அமைப்பின் உயரம் 4 அடியாக இருத்தல் வேண்டும்.
அடர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் வைப்பதற்கு ஏற்றவாறு தனித்தனி தீவன மற்றும்
தண்ணீர் தொட்டிகள்அமைத்தல் நல்லது.
இடவசதி தேவைகள்
இந்திய சூழலுக்கு உகந்த பரிந்துரைக்கப்பட்ட இடவசதி : மற்றும் குட்டி ஈன்ற ஆடுகள்
வயது கூரை அமைக்கப்பட்ட பகுதி திறந்த வெளிப் பகுதி
மூன்று மாதம் வரை
0.2 – 0.25
0.4 – 0.5
மூன்று முதல் ஆறு மாதம் வரை
0.5 – 0.75
1.0 – 1.5
6-12 மாதங்கள்
0.75 – 1.0
1.5 – 2.0
பெரிய ஆடுகள்
1.5
3.0
கிடா, சினை ஆடுகள்
1.5 – 2.0
3.0 – 4.0
ஒரு ஆட்டிற்கு தேவையான இடவசதி (இந்திய தகுதிப் பிரிவு) பரிந்துரைகள்
ஆடுகளின் வகை ஒரு ஆட்டிற்கு தேவையான குறைந்த பட்ச இடவசதி
கிடாக்கள் - (குழுக்கள் முறையில்) 1.8
கிடாக்கள் – (தனிப்பட்ட முறையில்) 3.2
குட்டிகள் (குழுக்கள் முறையில்) 0.4
தாயிடமிருந்து பிரித்த குட்டிகள் 0.8
ஒரு வருட வயதான ஆடுகள் 0.9
பெட்டை ஆடுகள் (குழுக்கள் முறையில்) 1.0
பெட்டை ஆடுகள் (குட்டிகளுடன்) 1.5
தீவன மற்றும் தண்ணீர் தேவையளவு
கால்நடை வகை ஓரு ஆட்டிற்கு தேவையான இடவசதி தீவனத்/தண்ணீர் தொட்டியின் அகலம் தீவனத்/தண்ணீர் தொட்டியின் ஆழம் தீவனம்/தண்ணீர் தொட்டியின் உள் உயரம்
செம்மறியாடு மற்றும் வெள்ளாடு 40-50 50 30 35
செம்மறியாடு குட்டி/வெள்ளாட்டு குட்டி 30-35 50 20 25
கொட்டகைகள்
பெரிய அளவிலான ஆட்டுப்பண்ணையின் பல்வேறு கொட்டகை பிரிவுகள்
ஆடுகள் தங்குவதற்கு கீழ்க்கண்ட கொட்டகை பிரிவுகள் தேவைப்படுகின்றன. அவை
பெட்டை ஆடுகள் கொட்டகை
கிடா ஆடுகள் கொட்டகை
குட்டி ஈனும் கொட்டகை
குட்டிகளுக்கான கொட்டகை
உரோமம் வெட்டும் மற்றும் இருப்பு வைக்கும் அறை
பணியாள் அறை
பெட்டை ஆடுகள் கொட்டகை
1 2 3
இனவிருத்திக்கு தேவையான பெட்டை ஆடுகளை பராமரிக்க இந்த கொட்டகை பயன்படுத்தப்படும்
60 பெட்டை ஆடுகளுக்கு மிhமல் இருக்கும் இக்கொட்டகையின் நீளம் 15 மீட்டர், அகலம் 4 மீட்டர் மற்றும் 3 மீட்டர் உயரமாகவும் இருத்தல் வேண்டும்.
க்ஷகாட்டகையின் உயரம் மூன்று மீட்டர் உயரமாகவும் செங்கற்களாலான தரையமைப்பு இருத்தல் நல்லது.
தரையானது குளிர் பிரதேசங்களில் மரத்தினாலும், அதிக மழை பெய்யும் இடங்களில் நல்ல உயரமான தரையமைப்பு வசதியும் இருத்தல் வேண்டும்.
கிடா ஆடுகளுக்கான கொட்டகை
4 5
இனவிருத்திக்கு உகந்த கிடா ஆடுகளை தனித்தனி அறைகள் கொண்ட கொட்டகையில் பராமரித்தல் நல்லது. பெரிய கொட்டகையமைப்பில், மரப்பலகைகளாலானதடுப்பு கொண்டு தனித்தனி அறைகள் அமைக்கலாம்.
செம்மறியாடு மற்றும் வெள்ளாடு குட்டி ஈனும் கொட்டகை அறை
6 7
8 9
சினையுற்ற செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளை தனித்தனியே இந்த கொட்டகையில் அடைக்கலாம். இதனை குட்டி ஈனும் அறையாக பயன்படுத்தலாம்.
இந்த கொட்டகை 1.5 மீ நீளமும், 1.2 மீ அகலமும், 3.0 மீ உயரமும் கொண்டதாகவும், தீவனம் மற்றும் வைக்கோல் வைப்பதற்கென தீவனத் தொட்டியும், தண்ணீருக்கென ஒரு தொட்டியும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
இந்த கொட்டகை ஈரமற்றதாக இருத்தல் வேண்டும். ஈரம் உறிஞ்சும் தன்மையையும் கொண்டிருத்தல் வேண்டும்.
குளிர் காலத்தில், இவ்வறைகளில் மிதமான வெப்பமூட்டிகளை பொருத்தி, பிறந்த குட்டிகளை குளிரின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.
செம்மறியாடு மற்றும் வெள்ளாடு குட்டிகளுக்கான கொட்டகை
10 11
12 13
ஒரு கொட்டகையில் குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்கும் வரை 25 குட்டிகள் என்ற அளவில் வைக்கலாம்.
ஒரு பெரிய கொட்டகையில் தடுப்புகளை ஏற்படுத்தி தாயுடன் உள்ள குட்டிகள், தாயிடமிருந்து பிரித்த முதிர்ச்சி அடையாத குட்டிகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த குட்டிகள் எனத் தனித் தனியே அடைத்து வளர்க்கலாம்.
பெரிய பண்ணையாக இருத்தால் மூன்று தனிக் கொட்டகையினை அமைத்து மேற்கண்ட மூன்று விதக் குட்டிகளை தனித் தனியே பிரித்து வளர்க்கலாம்.
ஒரு கொட்டகையினுள் அதிகபட்சமாக 75 ஆடுகளுக்கு மிகாமல் வளர்க்க 7.5மீ நீளம், 4மீ அகலம் மற்றும் 3மீ உயரம் கொண்டு கொட்டகையினை அமைக்க வேண்டும்.
கொட்டகையினை அகலவாக்கில் இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். 5மீ நீளம் ஒ 4மீ அகலம் ஒ 3மீ உயரம் கொண்ட பிரிவில் தாயிடமிருந்து பிரிக்காத குட்டிகளையும் 2.5மீ நீளம் ஒ 4மீ அகலம் ஒ 3மீ உயரம் கொண்ட பிரிவில், தாயிடமிருந்து பிரித்த குட்டிகளையும் வைத்து அடைத்து வளர்க்கலாம்.
நோயுற்ற ஆட்டுக் கொட்டில்
15 16
பண்ணையில் நோயுற்ற ஆடுகளைத் தனிமைப்படுத்தி அடைக்க நோயுற்ற ஆட்டுக் கொட்டகை ஒன்று அமைத்தல் வேண்டும்.
3மீ நீளம் ஒ 2மீ அகலம் ஒ 3மீ உயரம் கொண்ட நோயுற்ற ஆட்டுக் கொட்டில் ஒன்றினை மற்ற கொட்டகையில் இருந்து தள்ளிக் கட்ட வேண்டும்.
கொட்டகையின் கதவு கீழ்புறம் பலகையினாலும் மேல்புறம் கம்பி வலையினாலும் ஆனதாகவும் இருத்தல் வேண்டும்.
கொட்டகையின் ஜன்னல் 0.7மீ அகலமும் 2மீ உயரமும் கொண்டு, கம்பி வலையினால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
செம்மறியாட்டுக் கம்பளி வெட்டும் அறை மற்றும் சேமிப்புக் கிடங்கு
கம்பளி வெட்டும் அறை மற்றும் சேமிப்புக் கிடங்கினை இரண்டு பாகங்களாக தடுப்புச் சுவர் எழுப்பி பிரித்துவிட வேண்டும்.
ஒரு பாகத்தில் கம்பளி மற்றும் கம்பளி வெட்டும் கருவிகளும் மற்றொன்றில் தீவனம் மற்றும் மருந்துகளை வைப்பதற்கும் பயன்படுத்தலாம்.
கம்பளி வெட்டும் அறை 6மீ நீளம் ஒ 2.5மீ அகலம் ஒ 3மீ உயரம் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
ஒரு மீட்டர் அகலம் மற்றும் 2மீ உயரம் கொண்ட கதவு முன்புறமாக இருத்தல் வேண்டும்.
கதவு மரச் சட்டங்களால் ஆனதாக இருக்கலாம். அறையின் நீள வாக்கில் இருபுறமும் ஒரு ஜன்னல் இருக்குமாறு அமைத்தல் வேண்டும்.
இந்த அறையின் தரை சுத்தமாகவும், சமதளத்துடனும் அமைத்து அறையின் சுவரில் 1ஙூமீ உயரத்திற்கு டைல்ஸ் ஒட்டுதல் வேண்டும்.
இந்த அறை நீர்க்கசிவு மற்றும் தூசி அற்றதாக இருத்தல் வேண்டும்.
அறையின் மூன்று பக்கங்களிலும் மூன்று ஜன்னல்கள் அமைத்தல் வேண்டும்.
வேலையாட்கள் அறை
ஆடு மேய்ப்போரின் தங்கும் இடம் பண்ணையில் எளிதில் சென்று வரக்கூடிய இடத்தில் அமைத்தல் வேண்டும்.
இந்த அறை 6மீ நீளம் ஒ 4 மீ அகலம் ஒ 3மீ உயரம் கொண்டும், கொட்டகையின் நீள வாக்கில் ஒரு மீட்டர் அகலம் மற்றும் இரண்டு மீட்டர் உயரம் கொண்ட கதவுடனும் பாதையை நோக்கி இருத்தல் வேண்டும்.
கொட்டகையின் கதவு சிறிய மரப் பலகைகளைக் கொண்டு அமைத்தல் வேண்டும். மேலும் நான்கு ஜன்னல்களும் கொண்டிருத்தல் வேண்டும். ஒன்று முற்றத்தை நோக்கியும் ஏனைய மூன்று ஜன்னல்கள் வெளிப்புறமாகவும் இருத்தல் வேண்டும்.
ஒவ்வொறு ஜன்னலும் 0.7மீ அகலமும் 1.2மீ உயரமும் கொண்டு சுற்றிலும் கம்பி வலையினால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டு பண்ணைகளின் பல்வேறு கொட்டகையின் அளவுகள்
கொட்டகையின் பெயர் நீ x அ x உ (மீ) அடைக்கப்படும் ஆடுகளின் எண்ணிக்கை குறிப்பு
பெண் செம்மறியாடு மற்றும் வெள்ளாடு கொட்டகை 15 x 4 x 3 60 -
ஆண் செம்மறியாடு மற்றும் வெள்ளாடு கொட்டகை 4 x 2.5 x 3 08 நீளவாக்கில் பிரித்தல்
செம்மறியாடு மற்றும் வெள்ளாடு குட்டிகள் கொட்டகை 7.5 x 4 x 3 75 அகலவாக்கில் பிரித்தல்
செம்மறியாடு மற்றும் வெள்ளாடு குட்டி ஈனும் கொட்டகை அறை 1.5 x 1.2 x 3 1 தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகள் வைக்க வேண்டும்
தனிமைப்படுத்தல் மற்றும் நோயுற்ற ஆட்டுக் கொட்டில் 3 x 2 x 3 1 நல்ல காற்றோட்டம் மற்றும் ஆழ்கூளப் பொருட்கள் கொண்டிருக்க வேண்டும்
கம்பளி வெட்டும் அறை 6 x 2.5 x 3 1 கம்பளியை பாதுகாக்க வசதிகள் செய்தல் வேண்டும்
ஆடு மேய்ப்போர் அறை 6 x 4 x 3 -- ஆட்டுப் பட்டிக்கு அருகில் இருத்தல் வேண்டும்.
பாலுட்டும் ஆடுகள் கொட்டில் 1.2 x 0.8 x 3 1 -
பிரிவுகள்
பல்வேறு பிரிவுகளின் கட்டுமான விபரங்கள்
தரை
03
மழை அதிகமுள்ள இடங்களில் கொட்டகையின் தரை சிறிய மரச் சட்டங்கள் அல்லது மரப்பலகைகளைக் கொண்டு அமைக்கலாம்.
மேற்கூறிய தரை அமைக்கும் போது மரப்பலகைகளின் அகலம் 7.5 செ.மீ முதல் 10 செ.மீ மற்றும் 2.5 செ.மீ முதல் 4.செ.மீ தடிமனும் கொண்டிருத்தல் வேண்டும்.
மரப்பலகையின் முனை வட்டமாகவும், இரண்டு மரப்பலகைகளுக்கு இடையேயான இடைவெளி 1.0 செ.மீ முதல் 1.5 செ.மீ அளவும் இருக்குமாறு அமைத்தல் வேண்டும். இதனால் ஆடுகளின் சிறுநீர் மற்றும் புழுக்கைகள் எளிதாக வெளியேற்றப்படும்.
இந்த மரப்பலகையிலான தரைதளம், தரையிலிருந்து குறைந்தது ஒரு மீட்டர் உயரத்தில் அமைத்தல் வேண்டும்.
இந்த மரப்பலகையிளலான தரைத்தளத்தை ஆடுகள் எளிதில் அடைய சாய்தளம் மரப்பலகையினால் அமைக்க வேண்டும்.
கம்பளி வெட்டும் அறை மற்றும் சேமிப்பு அறை மற்றும் வேலையாட்கள் அறையின் தரை சிமெண்ட் மற்றும் செங்கல் கொண்டு அமைத்து சமதளப்படுத்தப்பட வேண்டும்.
கூரை
02 03
மேற்கூரை எஃகு இரும்பிலான தகடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டால் தகடுகளைக் கொண்டு அமைக்கலாம். மழை அதிக அளவு இல்லாத இடங்களில் ஓலைகளைக் கொண்டு மேற்கூரை அமைக்கலாம்.
வாயிற்கதவு
01 02
ஒவ்வொரு கொட்டகையிலும் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வாயிற்கதவுகள், கொட்டகையின் நீளவாக்கில் அல்லது அகலவாக்கில் அமைத்தல் வேண்டும்.
ஒவ்வொரு வாயிற்கதவின் அளவும் 0.8மீ அகலமூம் ஒரு மீ உயரமும் கொண்டிருத்தல் வேண்டும். இது மரக்கட்டைகளால் ஆனாதகவும், கொட்டகையின் நுழைவு வாயிலுக்கு ஏற்றதாகவும் இருத்தல் வேண்டும்.
தீவனத் தொட்டி
Manger and water trough Manger and water trough
Manger and Water trough Manager and Water trough
தீவனத் தொட்டி சிமெண்ட் அல்லது மரத்திலானதாகவும் இரண்டு பாகங்கள் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். தீவனம் மற்றும் உலர் தீவனம் வைப்பதற்கு இது உதவும்.
வைக்கோல் மற்றும் உலர்தீவனத் தட்டு ஒன்றினை ஆடுகளின் தலை மட்டம் அல்லது சிறிது தலைக்கு கீழே அமைத்தல் வேண்டும்.
தீவனத் தொட்டியினை தரையிலிருந்து 450 மீமீ முதல் 600 மீமீ உயரத்தில் தூக்கி நிறுத்தல் வேண்டும்.
தண்ணீர் தொட்டி சிமெண்ட் அல்லது எஃகு இரும்பிலான வாளியில் செய்து சுவற்றிலிருந்து கொக்கி மூலம் தொங்க விட வேண்டும்.
தீவனத் தொட்டி எளிதில் தூக்கிச் செல்லக்கூடியதாகவும் அமைக்கலாம். ஒரு கொட்டகையில் வைக்கப்படும் தீவனத் தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டிகள் அங்குள்ள ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடும்.
குளியல் தொட்டி
Dipping tank
ஆடுகளை நுண்ணுயிரிகள் தாக்கத்திலிருந்து பாதுகாக்க எஃகு இரும்புத் தகடுகளாலான குளியல் தொட்டி அல்லது செங்கல் / சிமெண்டிலான குளியல் தொட்டிகளை அவரவர் பொருளாதாரம் மற்றும் இருக்கும் இடத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.
எஃகு இரும்பிலான தகடுகளால் குளியல் தொட்டி அமைக்கும்போது இதை மண்ணில் நன்றாக பதியவைக்க வேண்டும். தொட்டியைச் சுற்றி நன்றாக மண் அணைத்தல் வேண்டும். அப்போதுதான் தண்ணீர் நிரப்பும்போது தொட்டியின் வடிவம் மாறாமல் இருக்கும்.
தொட்டியை பதிக்கும் இடத்தில் மண் தளர்வாகக் காணப்பட்டால், சிமெண்ட் கான்கிரீட் கொண்டு அடித்தளத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
இந்த குளியல் தொட்டி கொட்டகையின் ஒரு பக்கமாக இருக்கவேண்டும்.
நடைபாதை / கால்நனைப்புப் பகுதி
கால்நனைப்பு மருந்துக் கலவையை எஃகு இரும்புத் தகடு அல்லது சிமெண்ட் பூச்சினாலான பள்ளத்தில் கொட்டகையின் நுழைவுவாயிலில் அமைத்தல் வேண்டும். இதனால் ஆடுகளுக்கு ஏற்படும் குளம்பு வீக்க நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கலாம்.
இந்த கால்நனைப்புப் பகுதி நன்றாக மண்ணில் பதிந்து இருத்தல் வேண்டும்.
வளர்ப்பு முறைகள்
செம்மறியாடு / வெள்ளாடு வளர்ப்பு முறைகள்
1.மேய்ச்சல் முறை
செம்மறியாடு / வெள்ளாடுகளை திறந்தவெளி மேய்ச்சல் நிலங்களில் மேயவிட்டு வளர்க்கும் முறையே மேய்ச்சல் முறையாகும்.
இம்முறையில் தீவனச் செலவு குறைவு
இம்முறையில் எல்லா வகைப்புற்களையும் நல்ல முறையில் உபயோகிப்பது அரிது ஆகும். எனவே நாம் சுழற்சி முறை மேய்ச்சலைப் பின்பற்றலாம். .
2. சுழற்சிமுறை மேய்ச்சல்
தற்காலிகத் தடுப்புகள் மூலம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களில் இம்முறையை பின்பற்றலாம்.
இம்முறையில் ஆடுகள் படிப்படியாக ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவிற்கு மாற்றப்படும். இவ்வாறு முழு மேய்ச்சல் நிலத்தில், மேய்ச்சல் செய்தால், மேய்ச்சல் நிலத்தின் முதல் பகுதியில் புற்கள் வளர்ந்து, இரண்டாம் மேய்ச்சலுக்குத் தயாராகிவிடும்.
இதனால் ஒட்டுண்ணிகளின் தாக்கம் குறையும் அல்லது கட்டுக்குள் இருக்கும்.
மேலும் தரமான புற்கள் வருடம் முழுவதும் ஆடுகளுக்கு மேய்ச்சல் மூலம் கிடைக்க ஏதுவாகும்.
இந்த முறையில் முதலில் குட்டிகளை மேயவிட்டு, பின்னர் பெரிய ஆடுகளை மேயவிட்டால் குட்டிகள் மேய்ந்து மீதமுள்ள அனைத்து புற்களையும் பெரிய ஆடுகள் தின்றுவிடும்.
மேய்ச்சல் கலந்த கொட்டில்முறை
இம்முறை குறைவான மேய்ச்சல் நிலம் உள்ள இடங்களில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு ஏற்றதாகும்.
இம்முறையில் வேலியிடப்பட்ட மேய்ச்சல் நிலத்தில் குறைந்த நேரம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வளர்க்கப்படுகின்றன.
இம்முறையில், கொட்டகையில் தீவனமளித்தல், இரவில் ஆடுகளை கொட்டகையில் அடைத்தல், 3 முதல் 5 மணி நேரம் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.
இம்முறையில் தீவனச்செலவு சற்று அதிகம் ஆகும்.
பயன்கள்
மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் மூலம் ஆடுகள் தங்களது ஊட்டச்சத்து தேவையினை பூர்த்தி செய்துகொள்ள இயலும்.
50 முதல் 350 ஆடுகள் வரை இம்முறையில் வளர்க்கலாம்.
வறட்சி காலத்தில், பயிரிடப்பட்ட புற்களை / புல் வகைகளை உட்கொள்ளுதல்
நல்ல தரமான குட்டிகளின் மூலம் இறைச்சி மற்றும் பால் கிடைக்கும்
குறைந்த வேலையாட்களே தேவைப்படுவதால் செலவு குறைவு, லாபம் அதிகம்.
கொட்டகை முறை
இம்முறை ஆடுகளை நாள் முழுவதும் கொட்டகையினுள் அடைத்து தீவனம் கொடுத்து வளர்த்தலே ஆகும்.
இம்முறையில் ஆடுகளை வெளியில் சுதந்திரமாக விட்டு வளர்ப்பது குறைவு
இம்முறையில் சுமாராக 50 முதல் 250 ஆடுகள் வரை வளர்க்கலாம். பாலுக்காக வளர்க்கப்படும் ஆட்டினங்களுக்கு இம்முறை உகந்தது.
இம்முறையில் ஆடுகளுக்கு வேளாண் கழிவுப்பொருட்களை இணைத்து கொடுத்து, ஒரு எக்டருக்கு 37 முதல் 45 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
இம்முறையில் நிறைய வேலையாட்கள் மற்றும் பணம் தேவைப்படும்
இம்முறையில் ஆடுகளை நெருங்கி கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் இயலும்.
இம்முறையில் ஆட்டுப்புழுக்கைகள் / ஆட்டுச்சாணம் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு, நல்ல உரமாகிறது.
நிறைய ஆடுகளுக்கு குறைந்த இடவசதி போதுமானது.
மண்தரையில் வளர்த்தல்
Mud Floor Mud Floor
இம்முறையில், ஒவ்வொரு வருடமும் 1-2"" மண்தரையின் மேல் தளத்தை எடுத்துவிடவேண்டும்.
மாதம் ஒருமுறை சுண்ணாம்புத்தூள் தெளிப்பதன் மூலம் ஆடுகளின் கொட்டகையில் நோய்த்தாக்கத்தினை குறைத்திடலாம்.
கொட்டகையை நல்ல மேட்டுப்பாங்கான, தண்ணீர் தேங்காத இடங்களில் அமைத்திடல் வேண்டும்.
ஆழ்கூள முறை வளர்ப்பு
இம்முறையில், ஆழ்கூளப்பொருட்களான வேர்க்கடலைத் தோல், கரும்புத்தோகை முதலியவற்றை கொட்டகையின் தரையில் மேல் 1/2 அடி ஆழத்திற்கு இட்டு, அதன்மேல் ஆடுகளை விட்டு வளர்க்கலாம்.
ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் ஆழ்கூளப்பொருட்களுடன் கலந்து நல்ல உரமாகப் பயன்படும்
ஆழ்கூளப்பொருட்களை 6 மாதத்திற்கொருமுறை அள்ளி எடுத்துவிடவேண்டும்.
பலத்த மழைக்காலத்தில், ஆழ்கூளப்பொருட்கள் அதிக ஈரத்தன்மையுடன் இருப்பின் அமோனியா வாயு உற்பத்தி ஆகும். ஆகவே அதிகம் ஈரம்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பரண்மேல் கொட்டகை
Elevated Floor
அதிக முதலீடு
இம்முறையில் தரையிலிருந்து 3 மீ உயரத்தில் மரப்பலகையிலான தரைகொண்ட கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்க்கலாம்.
இம்முறையில் குறைந்த வேலையாட்களும், பசுந்தீவனம் உற்பத்தி செய்ய அதிக நீர்பாசன நிலமும் தேவைப்படும்.
உயர்த்தப்பட்ட கொட்டகை சுத்தமாக இருக்கும். மேலும் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் தரையில் விழுந்துவிடும். இதனை ஆறு மாதத்திற்கொரு முறை எடுத்துவிட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேணடும்
நன்றி ..... © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்