யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

தமிழக ஆடு இனங்கள்

இந்த கிழ்கண்ட இனங்களே நமது தமிழக கால/பருவ சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த இனங்கள் மேய்ச்சல் மற்றும் கொட்டில் முறை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது. நமது பகுதிக்கு தகுந்த கிழ்கண்ட இனங்களையே வளர்த்து பயன் அடைவோம்.

மோளை ஆடு அல்லது மேகரை ஆடு:
மிகக்கடுமையான பஞ்சம் தாங்கும் ரகம்

இது தமிழகத்தின் மேற்குப்ப்பகுதிகளான ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, கரூர், திண்டுக்கல்,நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம்,பவானி,அந்தியூர் பகுதியில இந்த வகை ஆடுகள் அதிகளவு காணப்படுகிறது .

மிகக்கடுமையான பஞ்சம் தாங்கும் ரகம். நோய் எதிர்ப்பு சக்தியில் முதல்தரம். கிடாய்க்கு மட்டும் கொம்புகள் இருக்கும்.நடுத்தர உயரத்துல, நல்ல சதைப் பிடிப்போட, சுத்தமான வெள்ளை நிறத்துல இந்த ஆடுகள் இருக்கும்.உடலின் நிறம் கடும் வெப்பத்தையும் தாங்கும். இறப்பு விகிதம் மிக மிக குறைவு.

பிறந்த குட்டிகளின் எடை சுமார் இரண்டு கிலோ வரை இருக்கும். இந்த ரக ஆடுகள் 8 முதல் 10 மாத வயதில் சினைக்கு வரும். வளர்ந்த ஆடுகள் சுமார் 7 முதல் 8 மாதத்திற்கு ஒருமுறை குட்டிகள் ஈனும். ஈத்துக்கு ரெண்டு முதல் நாலு குட்டிகள் வரை ஈனும். சராசரியா ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிங்க கிடைச்சுக்கிட்டே இருக்கும். குறைவான தீவனத்தில் மாதம் 2 முதல் 3 கிலோ வரை வளர்ச்சி அடையும் தன்மை கொண்டது. ஒரு வயதுள்ள பெண் ஆடுகள் 30 கிலோ முதல் 36 கிலோ வரை எடை இருக்கும். ஆண் ஆடுகள் 40 முதல் 50 கிலோ எடை வரை இருக்கும்.

வளர்ப்புக்கு மிகவும் எற்ற ஆடுகள்.
கறிக்கு மிகவும் ஏற்ற ரகம். இறைச்சி மிகுந்த சுவை உடையது. இதன் தோளுக்கு நல்ல கிராக்கி உள்ளது.

கன்னி ஆடு:
சிப்பாய் நடை போடும் கன்னி!

கன்னி ரக ஆடு... கரிசல் மண், குன்றுகள் அதிகமா இருக்கற பகுதிகள்ல இருக்கும். நல்லா உயரமா இருக்கும். கிடா ஆடு 50 கிலோவும், பெட்டை ஆடு 30 கிலோவும் எடை இருக்கும். ரெண்டுக்குமே கொம்பு இருக்கும். உடம்பு கருப்பு நிறத்துலயும், தலையில முன்பக்கமா ரெண்டு வெள்ளைக் கோடுகளும் இருக்கும். காதுகள்லயும் ரெண்டு வெள்ளைக் கோடுகள் நல்லா தெரியும். வயித்தோட அடிப்பகுதி, கால் குளம்பின் மேல்பகுதி வெள்ளையா இருக்கும். இந்த இன ஆடுகள் மந்தையா நடந்து போறப்ப, கால் அசைவுகளைப் பாத்தா... பட்டாளத்து சிப்பாய்ங்க வரிசையா போற மாதிரி இருக்கும். இந்த இனத்தை 'பால் கன்னி’னு சொல்வாங்க. வெள்ளை நிறத்துக்குப் பதிலா... செந்நிறம் அதிகமா இருந்தா 'செங்கன்னி’னு சொல்லுவாங்க. கன்னி ஆடுகள் ஒரு ஈத்துல ரெண்டு குட்டியிலிருந்து நாலு குட்டிகள் வரை ஈனும்.

காணப்படும் இடங்கள்:
விருதுநகர் (சாத்தூர், வெம்பக் கோட்டை, ராஜ பாளையம்), தூத்துக்குடி (புதூர், கயத்தார், கோவில்பட்டி), திருநெல்வேலி (குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர்) முதலிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது.

கன்னி ஆட்டின் சிறப்பியல்புகள்:
இவை கருமை நிறத்துடனும் முகத்திலும் காதுகளிலும் வெள்ளை அல்லது பழுப்புநிற கோடுகளுடனும், மேலும் அதன் அடிவயிறு, தொடைப்பகுதி, வால்பகுதி மற்றும் கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடன் காணப்படும். கருப்பு நிறத்தில் வெள்ளைநிற கோடுகள் காணப்பட்டால் அவை "பால்கன்னி' என்றும் பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால் "செங்கன்னி' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவற்றின் காது மற்றும் நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இதனை வரி ஆடுகள் என்று அழைக்கிறார்கள்.

குட்டிகளை நன்றாக பேணி பாதுகாக்கும் பண்புடையவை. உயரமாகவும், திடகாத்திரமாகவும், ஒரே நிறமுடன் இருப்பதும் கூட்டமாக நடக்கும்பொழுது ஒரு "ராணுவ அணிவகுப்பு' போல கண்ணை கவரும் இந்த கன்னி ஆடுகள். இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு ஆகும். கிடா மற்றும் பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் உண்டு.

கன்னி ஆடுகள் முதல் தடவை மட்டும் 8-10 மாச வயசுல சினை பிடிக்கும். அதுக்குப் பிறகு, ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி போடும். ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டி வரை போடும். இந்த இனத்துலயும் தாயே மூணு மாசம் வரைக்கும் பால் கொடுத்துப் பரமாரிச்சுடும். அதனால புட்டிப்பால் தேவையே இருக்காது.
பிறந்த கிடா குட்டிகள் 2.1 கிலோவும், பெட்டை குட்டிகள் 2.05 கிலோ உடல் எடையுடன் இருக்கும். ஒரு வருட வயதில் கிடாக்கள் 21.70 கிலோவும், பெட்டை ஆடுகள் 20.90 கிலோ எடையுடன் இருக்கும். மேலும் ஒரு வருட வயதில் கிடாக்கள் 76 செ.மீ. உயரமும், பெட்டை ஆடுகள் 72 செ.மீ. உயரத்துடனும் காணப்படும்.

கொடி ஆடுகள்:
கடலோரத்துக்கு ஏத்த கொடி!

இதை 'போரை ஆடு’னும் சொல்வாங்க. இந்த வகை போரை ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன.மற்றபடி, தாஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஓர் சில இடங்களில் இவை காணப்படுகின்றன. கடலோர மாவட்டங்களுக்கு ஏத்த இனம்!

நல்ல உயரம், நீண்ட கழுத்து, உயரமான கால், ஒல்லியான உடம்பு இதுதான் கொடி ஆட்டோட அடையாளம். கொடி ஆட்டுக்குக் காலும், கொம்பும் நல்ல நீளமா இருக்கும். 15 மாச வயசுல மூணடி உயரத்துக்கு வளர்ந்து, பார்க்கவே கம்பீரமா இருக்கும்.
இந்த ஆடுகள் ரெண்டு நிறத்துல இருக்கும். வெள்ளை நிறத்துல கருப்பு மையை அள்ளி தெளிச்சது போல இருக்குற ஆடுகளை, 'கரும்போரை’ அல்லது 'புல்லைபோரை’னும்... வெள்ளை நிறத்துல செந்நிறம் கலந்து இருந்தா 'செம்போரை’னும் சொல்வாங்க. 100 செ.மீ உயரம் வரை இருக்கும். எடையைப் பொறுத்தவரைக்கும் கொடி ஆட்டுல ஏழு மாசத்துலயே ஒரு பெட்டை ஆடு பதினஞ்சு கிலோ எடை வரைக்கும் வந்துடும். கிடா, இருபது கிலோ எடைக்கு வந்துடும். கிடா 47 கிலோவிலிருந்து 70 கிலோ வரையும் இருக்கும். பெட்டை 32 கிலோ வரை இருக்கும்.

கொடி ஆடுகள் முதல் தடவை சினை பிடிக்க 10-12 மாசம் ஆகும். அதுக்குப் பிறகு, ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி ஈனும். ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். சராசரியா ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிங்க கிடைச்சுக்கிட்டே இருக்கும். மூணு மாசம் வரைக்கும் குட்டிகளுக்கு தாராளமா பால் கொடுத்து அதுவே பராமரிச்சுடும். போதுமான அளவுக்கு தாய்ப்பால் குடிக்குறதால குட்டிக நல்ல ஆரோக்கியத்தோட வளரும்.

பிறந்த கிடா குட்டிகள் : 1.5-2.1 கிலோ எடை,பெட்டை குட்டிகள் : 1.5-2.05 கிலோ எடை

சேலம் கருப்பு அல்லது கீகரை ஆடு அல்லது கருப்பாடு:

இது காவெரிக்குக் கீழ்ப்பாகுதிகளான சேலம், ஓமலூர், மேச்சேரி,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தொட்டியம் பகுதிகளில் காணப்படுகிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.

பஞ்சம் தாங்குதல் மற்றும் நொய் எதிர்ப்பில் முதல் தரம். பலிபூசைகளுக்கு விரும்பி வாங்கப்படும் இனம்.அட்டப்பாடி பகுதியில் குறும்பர், இருளர் வளர்க்கும் ஆடுகள் இவ்வினத்தோடு தொடர்புடையவை.
நல்ல குட்டிகள் ஈனும் திறன் உடையவை.

பள்ளை ஆடு!

இந்த ஆடுகள், குட்டையா இருக்கும். 'குள்ள ஆடு’, 'சீனி ஆடு’னும் சொல்வாங்க. சின்னக்கொம்பும், மூழிக்காதும் இதோட அடையாளம். குட்டிகள் பிறக்கும்போது கால் குட்டையாவும் உடம்பு அகலமாவும் இருக்கும். இந்த இனம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பரவலா இருக்கு. இந்த ஆடுகளும் ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். இவை பலவகையான நிறத்துடன் இருக்கும்

Low cost Hydroponics

மண்ணில்லா தீவன வளர்ப்பு முறை ( Low cost Hydroponics )

மண்ணில்லா தீவன வளர்ப்பு முறை :
இந்த பதிவில் விரிவாக கொடுக்கபட்டுள்ளது.. நன்றிகள் உயர்திரு.வீர குமார்  ஐயா அவர்களுக்கு
https://www.facebook.com/groups/Livestock.TN/
https://www.facebook.com/groups/NaturalFarmingTN/

841293_624380240936936_2093871120_o856870_624380604270233_16958475_o921285_624380487603578_1313306990_o1239058_624382377603389_1068420876_o1400373_624381197603507_400305229_o1401407_624381527603474_1735872882_o1402353_624382177603409_1200867546_o1410793_624380524270241_941318239_o