யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...

செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...

செலவில்லாத தீவன சாகுபடி... 
ஆரோக்கியத்தோடு அதிக பால்... 

‘‘பருவ நிலை மாறுதல்களால் விவசாயம் பொய்த்துப் போனாலும், தவறாமல் வருமானத்தைக் கொடுப்பது கால்நடை வளர்ப்புதான். என்றாலும் திட்டமிட்ட தீவன மேலாண்மையும், நோய் மேலாண்மையும் இருந்தால்தான் கால்நடை வளர்ப்பில் லாபத்தை சம்பாதிக்க முடியும்’’ என்பது பெரும்பாலான கால்நடைத் துறை வல்லுநர்களின் கூற்று.

‘‘நூத்துக்கு நூறு சதவிகிதம் இது சரி. இதையெல்லாம் முழுக்க முழுக்க நான் தவறாம கடை-பிடிக்கிறதாலதான்... என்னோட ஆடு, மாடுக எந்த நோயுமில்லாம ஆரோக்கியமா திடகாத்திரமா இருந்து, எனக்கு லாபத்தைக் கொடுத்துக்கிட்டிருக்குÕÕ என்று உற்சாகமாகச் சொல்லும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஆதிநாராயணன்,
பசுந்தீவனத்துக்காக தனித்தோட்டத்தையே பராமரித்துக் கொண்டிருக்கிறார்.

பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பாப்பா நாடு அருகிலுள்ள ஆலத்தன்குடிகாடு கிராமத்தில்தான் இருக்கிறது அந்த தீவனத் தோட்டம். மல்பெரி, வேலிமசால், சவுண்டல் (சுபாபுல்) என ஏகப்பட்ட தீவனப்பயிர்கள் தளதளவென நின்று கொண்டிருக்கின்றன அந்த இரண்டரை ஏக்கர் தோட்டத்தில்.

தீவன அறுப்பில் ஈடுபட்டிருந்த ஆதிநாராயணன், அதற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு நம்மிடம் பேசினார். ‘‘பத்து வருஷத்துக்கு முன்ன நூறு ஆடுகளை வெச்சுருந்தேன். அதுக்காக உருவாக்குனதுதான் இந்தத் தீவனத் தோட்டம். 20 சென்ட் நிலத்துல தண்ணீர்ப்புல் (எருமைப்புல்), 230 சென்ட்டுல மல்பெரி, அதுக்கிடையில ஊடுபயிரா முயல்மசால், வேலிமசால், கலப்பைக் கோணியம், சங்குப்புஷ்பம் எல்லாம் இருக்கு. வேலி ஓரத்துல 500 சவுண்டல் மரம் இருக்கு. இந்தத் தோட்டத்தை வெச்சு பத்து பதினைஞ்சு மாடுக, கொஞ்சம் ஆடுகளை வளக்க முடியும்.

ஆறு வருஷத்துக்கு முந்தி வேலையாள் பிரச்னை வந்ததால, அஞ்சாறு ஆட்டை மட்டும் வெச்சுகிட்டு மிச்சத்தை வித்துட்டேன். இப்ப என்கிட்ட ரெண்டு கறவை மாடுகளும் அஞ்சு ஆடுகளும்தான் இருக்கு. என் ஆடு, மாடுகளுக்குப் போக மிச்சமிருக்கிற தீவனத்தை பக்கத்து விவசாயிங்களுக்கு இலவசமா கொடுத்துகிட்டிருக்கேன். கொஞ்சத்தை அப்படியே வெட்டி, தோட்டத்துல மூடாக்கா போடுறேன். அப்படியி-ருந்தும் மல்பெரி எக்கச்சக்கமா இருக்குறதால பட்டுப்புழுவையும் வளர்த்து- கிட்டிருக்கேன்’’ என்று முன்னுரை கொடுத்தவர்... தொடர்ந்தார்.

குறைவான செலவு.. அதிக ஆரோக்கியம்!
‘‘கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை அதிகமா பயன்படுத்தச் சொல்றாங்க கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையத்து அதிகாரிங்க. அதேமாதிரி நம்ம அரசு கால்நடைப் பண்ணைகள்லயும் பசுந்தீவனத்தைதான் நிறையப் பயன்படுத்துறாங்க. இது மூலமா தீவனச் செலவு குறையுறது மட்டுமில்லாம... ஆடு, மாடுக ஆரோக்கியமா வளருதுங்க. அதனாலதான் நான் தீவனங்களை உருவாக்கிட்டு பண்ணைத் தொழில்ல இறங்குனேன். ஆனா, பல இடங்கள்ல புதுசா பண்ணை வெக்கிறவங்க தீவனத்தைப் பயிர் செய்யாம, பண்ணையை ஆரம்பிச்சுட்டு, கடைசியில தீவனத்துக்கு ரொம்ப சிரமப்படுறாங்க. அதிக விலை கொடுத்து புல்லையும், அடர்தீவனத்தையும் வாங்கிப் போட்டு நட்டமாயிட்டு... ஆடு, மாடு வளர்த்தாலே நட்டம்தான்னு சொல்லிடுவாங்க."

ஆடு வளர்ப்பிலுள்ள பிரச்னைகளும், தீர்வுகளும்