யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி

காரைக்கால்: காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலைய மனையியல் பிரிவு சார்பில், சில்பாலின் பைகளில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாம் விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுவினருக்கு நடத்தப்பட்டது.
 முகாமிற்கு, அறிவியல் நிலைய தலைவர் சுரேஷ் தலைமை வகித்து பேசியதாவது:
"இன்றைய காலகட்டத்தில் ரசாயன உரம் கொண்டு தயாரிக்கப்படும் காய்கறி மற்றும் சாகுபடிகளை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. விவசாயிகளின் வசதிக்காக மண்புழு உரம் நிலைய வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி மண்புழு கிலோ ரூ.300-க்கும், மண்புழு உரம் ரூ.7-க்கும் விற்கப்பட்டு வருகிறது. விவசாயிகள், சுய உதவிக்குழுவினர் வாங்கி பயன்பெறவேண்டுகிறோம்" என்றார்.
தொடர்ந்து, சில்பாலின் பைகளை கொண்டு மண் புழு உரம் தயாரித்தல், மண்புழு வகைகள், சில் பாலிதீன் பை அமைப்பு, இடம் தேர்வு, தொட்டி அமைக்கும் முறை, தாவரம் மற்றும் விலங்கு கழிவுப்பொருட்களை தேர்வு செய்யும் முறை, மண் புழு உரத்தின் பயன்கள் மற்றும் விற்பனை குறித்து, நிலையத்தின் மனையியல் பிரிவு உதவி தொழில்நுட்ப வல்லுநர் லதா செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டினார்.
முகாம் ஏற்பாடுகள், நிலையத்தின் முதல்வர் விஜயக்குமார் தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

இரண்டு லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க முடிவு!


காரைக்கால்: காரைக்காலை அடுத்த மாதூர் வேஎளாண் அறிவியல் நிலைய பண்ணையில் 2 லட்சம் மதிப்பிலான மீன் குஞ்சுகள் வளர்க முடிவு செய்துள்ளோம் என நிலையத்தின் தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
காரைக்காலை அடுத்த மாதூர் வேஎளாண் அறிவிய நிலைய பண்ணையை, நிலையத்தின் தலைவர் சுரேஷ் நேற்று ஆய்வு செய்தார்.  தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களிடம் சுரேஷ் கூறியதாவது:
"நிலையத்தில் மீன் வளர்ப்புக்கென 5 குட்டைகள் உள்ளது. அனைத்து குட்டைகளும் கான்கிரீட் சுவர்களால் பாதுகாப்புடன் உள்ளது. இதில் ஒரு குட்டையில் மட்டுமே மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு குட்டையில் வளர்க்கப்படும் மீன்களை வைத்தே சுய உதவிக்குழு மற்றும் மற்றவர்களுக்கு மீன் வளர்ப்பு கற்றுத்தரப்பட்டு வருகிறது. மற்ற 4 குட்டைகள் சும்மாவே உள்ளது. இனி வரும் காலங்களில் மற்ற 4 குட்டைகளையும் சேர்த்து 5 குட்டைகளிளும் தண்ணீர் நிரப்பி பல்வேறு மீன்கள் வளர்க்க முடிவு செய்துள்ளோம்.
குறிப்பாக, கெண்டை, கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக்கெண்டை உள்ளிட்ட மீன்களை வளர்க்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். மேலும், ஒரு குட்டையில், புதிய வகை கொண்டையான பேட்லா கொண்டை வளர்க்க ஏற்பாடு செய்துள்ளோம். பேட்லா கொண்டை உட்பட சுமார் 2 லட்சம் கொண்டைகள் விடப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன் குஞ்சுகள் வாங்கி வரப்பட்டுள்ளது.  இனி வரும் காலங்களில் நிலையத்தின் அனைத்து குட்டைகளிளும் அனைத்து வகை மீன் குஞ்சுகளை வளர்த்து அனைத்து மீன் வளர்ப்போருக்கும் மீன் குஞ்சுகளை விற்பனை செய்யவுள்ளோம்"  என்றார்.