யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 19 மே, 2013

பாரம்பரியமிக்க நாட்டுக்கோழி வளர்ப்பு


பாரம்பரிய நாட்டுக் கோழியை மகளிர் குழுக்கள், வளரும் குழந்தைகள், வயோதி கர்கள்,பென்ஷன்தாரர்கள், வீட்டில் உள்ள பெண்கள், மனஅழுத்தம் உள்ளவர்கள், கடுமையான வேலைப்பளு உள்ளவர்கள், விவசாயிகள், தோப்புகள், தோட்டம், மேய்ச்சல் நிலம் உள்ளவர்கள், காலி இடம் உள்ளவர்கள் என யாவரும் வளர்க்கலாம்.


நாட்டுக்கோழி வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை: கழிச்சல் இல்லாமல், எச்சம் இடும் பகுதி வெள்ளையாக மிச்சம் ஒட்டி இருக்கக்கூடாது. ரோமம் கட்டி ஒட்டி இருக்கக்கூடாது. கோழியின் கால்கள் இளம் மஞ்சள் நிறத்துடன் கொண்டை சிவந்த நிறத்துடன், மூக்கு இளம் மஞ்சள் நிறத்துடன், பிடிக்கும்பொழுது திமிறிக் கொண்டு பலத்த சப்தம் இடவேண்டும். தொடைப்பகுதி நல்ல இறுக்கத்துடன் இருக்க வேண்டும். கொண்டை கருமை நிறத்துடன் இருக்கக்கூடாது. நல்ல சுறுசுறுப்புடன் ஓடியாடி மண்ணில் புரண்டு விளையாட வேண்டும்.
இப்படிப்பட்ட குணநலன்கள் கொண்ட நாட்டுக் கோழியாக பார்த்து வாங்க வேண்டும். முட்டை இடுகின்ற கோழிகள், அடைபடுத்த கோழிகள், முட்டை இட்டு கழிக்கின்ற கோழிகளை வாங்கக்கூடாது. வளர்ப்பதற்கு 3, 4 மாத வயது கோழிகளை வாங்க வேண்டும். உங்கள் இடத்தில் பழகி பெட்டையும் சேவலும் இனச்சேர்க்கை சேர்த்து முட்டையிட்டு அடைவைத்து குஞ்சு பொரிக்க வேண்டும்.
6 பெட்டைக்கு ஒரு சேவல் என்ற கணக்கில் திறந்த வெளியில் வெயிலில் மேய விட்டு வளர்க்கலாம். விற்பனைக்கு சந்தைகள், கறிக் கடைகள், திருவிழா காலங்கள், பண்டிகைகள் என ஏராளமான வழிவகைகள் விற்பனை வாய்ப்புள்ளது. சிறிய முதலீட்டில் பாரம்பரிய நாட்டுக் கோழியை வளர்க்கலாம்.
6 பெட்டை கோழிகள் 7, 8 மாத வயதில் முட்டை இட ஆரம்பிக்கும். ஒரு கோழி 10லிருந்து 13 முட்டைகள் வரை இடும். வருடத்தில் 6 முறை மட்டும் முட்டை இடுவதாக வைத்துக்கொண்டாலும் வருடத்தில் தோராயமாக 60-75 முட்டைகள் கிடைக்கும். ஒரு கோழிக்கு 9 முட்டை அடை வைத்து ஏழு குஞ்சுகள் பொறித்தாலும் இன்றைய நிலவரப்படி ஒரு கோழிக்குஞ்சின் விலை ரூ.40/- (ஒரு நாள் வயது கோழிக்குஞ்சு).


இன்குபேட்டர் மின்சார குஞ்சு பொரிப்பான் கோழி வாத்து மற்றும் அனைத்து வகை முட்டைகளைப் பொரிக்க வைக்க




   Contact Suppiler   


yarasoolgoatfarm@gmail.com
hajamohinudeen20062@gmail.com
hajamohinudeen2006yahoo.co.in
+918973908930


பால் கறவை இயந்திரம்


பண்ணைகளில் அதிக எண்ணிக்கையில் கறவை மாடுகளைப் பராமரிக்கும் போது அதிகப்படியான ஆள்களும், அதிக நேரமும் தேவைப்படுகிறது. வேலையாள்களின் தேவையைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், சுகாதாரமான முறையில் பால் உற்பத்தி செய்வதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.
பத்து கறவை மாடுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு பால் கறவை இயந்திரத்தைப் பயன்படுத்துவது இலாபகரமாக இருக்கும். இந்தக் கறவை இயந்திரம் மூன்று பேர் செய்யக்கூடிய வேலையைச் சுலபமாக செய்து முடித்துவிடும். மேலும், இந்த இயந்திரம் மூலம் சுகாதாரமான முறையில் பால் உற்பத்தி செய்ய முடிவதுடன், கையால் கறப்பதைவிட 50 சதம் குறைந்த நேரத்தில் முழுமையாகப் பாலைக் கறந்து விடலாம். இதனால், கறவை மாடுகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்தி குறைந்த பராமரிப்புச் செலவில் அதிகப் பால் உற்பத்தி செய்ய முடிகிறது. குறிப்பிட்ட நேரத்தில் சீரான முறையில் பால் கறப்பதால் கறவை மாடுகளுக்கு மடிநோய் வராமலும் தடுக்க முடியும்.
இயங்கும் முறை
மாட்டின் மடியில் சேர்ந்திருக்கும் பாலை காம்பில் பொருத்தும் குழாய்கள் மூலம் உறிஞ்சுவதால் பால் கறக்கப்படுகிறது. காம்புக்கு விட்டு விட்டு அழுத்த நிலை கொடுக்கப்படுகிறது.
இடையிடையே பால் உறிஞ்சும் செயலும் நடைபெறுகிறது. அழுத்தும் நிலை, உறிஞ்சும் நிலை என்று மாறி மாறி ஏற்படுவதால் பால் கறக்கும் செயலானது இயற்கையில் கன்று பாலைக் குடிப்பது போன்ற உணர்ச்சியைத் தாய்ப் பசுவிற்கு அளிக்கிறது. பால் வரும் குழாய் கண்ணாடி ஆனதால் பால் வருவதைக் கவனித்து, பால் வராத சமயத்தில் இயந்திரத்தை நிறுத்த முடிகிறது.
பால் கறப்பதற்கு முன்பு கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். மடியைச் கிருமி நாசினி கொண்ட தண்ணீரால் கழுவி, பின்பு உலர்ந்த சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பால் கறவை இயந்திரத்தை உபயோகிக்கும் முன்பு சிறிதளவு பாலை, கறுப்புத் துணி கொண்டு மூடிய சிறிய கிண்ணத்தில் கறந்து பார்ப்பதன் மூலம் பாலின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியும்.
உறிஞ்சும் குழாயைப் பசுவின் காம்பில் வைத்து கறவை இயந்திரத்தை இயக்க வேண்டும். பால் கறந்த பின் காம்புகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதால் மடி வீக்க நோய் வருவதிலிருந்து பாதுகாக்கலாம்.