யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 19 மே, 2013

நவீன முறையில் வெள்ளாட்டுக்கொட்டகை அமைப்பது எப்படி?


நமது நாட்டின் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப உண்ணும் உணவில் புரதச்சத்தின் தேவையும் கூடிக் கொண்டே வருகிறது. இறைச்சி மற்றும் பால் உற்பத்தியை பெருக்குவதின் காரணமாக மக்களின் புரதத்தேவையை ஈடுசெய்ய முடியும். அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணப்படும் வெள்ளாட்டு இறைச்சியினை கவனத்தில் கொண்டு பார்த்தால் வெள்ளாட்டினை எண்ணிக்கையில் பெருக்க இயலாது. ஆனால் ஒவ்வொரு வெள்ளாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய இறைச்சி மற்றும் பாலின் அளவைக் கூட்டி அதன் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வதே நமது குறிக்கோளாகும். இதற்கு அறிவியல் பூர்வமான பராமரிப்பு உத்திகளைக் கையாள வேண்டும்.

இதில் முக்கியமான ஒன்று வெள்ளாடுகள் தங்குவதற்கு கொட்டகை அமைப்பது ஆகும். மேய்ச்சல் நிலங்களின் பரப்பளவு சுருங்கிவரும் நிலையில் கொட்டில் முறையில்தான் வெள்ளாடுகள் வளர்க்கும் நிலை நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. நல்ல முறையில் ஆட்டுக்கொட்டகை அமைத்தால் ஆடுகள் நலமாகவும் வளமாகவும் வளர்ந்து பெருகி நல்ல பலன் கொடுக்கும். இனி ஆட்டுக் கொட்டகையை அறிவியல் ரீதியாக எப்படி அமைப்பது என விரிவாக காண்போம்.
கொட்டகை அமைக்க இடம் தேர்வுசெய்தல்:கொட்டகையை மேடான இடத்தில் அமைக்க வேண்டும்.

மழைநீர் தேங்கிவிடாமல் வடிகால் உள்ள நிலமாக இருக்க வேண்டும். குடிநீர் வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும். மின்சார வசதி மற்றும் சாலை போக்குவரத்து இணைப்பு உள்ள இடமாக இருக்க வேண்டும். கொட்டகையை சுற்றி நிழல் தரும் மரங்கள் இருக்க வேண்டும். ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனப்பயிர் சாகுபடி செய்ய விளைநிலம் இருக்க வேண்டும்.
கொட்டகை அமைக்கும்போது கவனிக்க வேண்டியவை: கொட்டகையின் நீளவாக்கு கிழக்கு - மேற்கு திசையில் அமைய வேண்டும். இப்படி இருப்பதால் காலை - மாலை வேளையில் சூரியனின் இளங்கதிர் கொட்டகையினுள் விழும். உச்சி வெயிலின் வெப்பத்தாக்கம் இருக்காது.
பக்கவாட்டுச்சுவர்: கொட்டகையின் நான்கு பக்க சுவர்களும் ஒரு அடி உயரம் வரைதான் கல் கட்டுமானத்தில் இருக்க வேண்டும்.

இதற்கு மேல் கூரை கம்பி வலை அல்லது மூங்கில் தட்டிகளைக் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு பக்கவாட்டுச் சுவர் அமைப்பதினால் வெளிச்சமும் நல்ல காற்றோட்டமும் கொட்டகையின் உள்ளேஇருக்கும். மழைகுளிர் காலங்களில் குறிப்பாக இரவு நேரத்தில் பக்கவாட்டு திறந்தவெளியை பாலிதீன்கோணிப்பைகளை கொண்டு திரை அமைத்து மூடலாம்.
கூரை: சூரிய வெப்பத்தைக் குறைவாகக் கடத்தும் பொருட்களைக் கொண்டு கூரை வேயப்பட்டால் அதன் அடியில் உள்ள ஆடுகளுக்கு வெப்ப அழற்சி ஏற்படாது. மழைவரும் பொழுது ஆடுகள் மழையில் நனையாமலும் கூரைபாதுகாக்கும். சுட்ட களிமண் ஓடுகள்அலுமினியம் மற்றும் இரும்புத் தகடுகள்,ஆஸ்பெஸ்டாஸ்லைட்ரூப்பனை மற்றும் தென்னை ஓலைபோன்றவை கொண்டு கூரை அமைக்கலாம். கூரையின் நடு உச்சி தரையிலிருந்து 3.50 மீட்டர் உயரமும் பக்கவாட்டில் 2.5 மீட்டர் உயரமும் இருக்க வேண்டும். கூரையின் விளிம்பு சுவரிலிருந்து 45-60செ.மீ. வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்.
தரை: நமது தட்பவெப்பச் சூழலுக்கு செம்மண்சரளை மண் அல்லது கிணற்று மண் இதில் ஏதாவது ஒன்றை தரை மட்டத்திலிருந்து 45 செ.மீ. உரத்திற்குப் பரப்பி திமிசுக்கட்டையால் நன்கு இடித்து கடினமாக இறுகச் செய்யலாம். இவ்வாறு தரை இருப்பதனால் ஆடுகளின் சிறுநீரை உறிஞ்சிக் கொள்ளும். ஆட்டுப் புளுக்கையினை கூட்டிப்பெருக்கவும் எளிதாக இருக்கும். தரையை வருடத்திற்கு இரண்டுமுறை 15 செ.மீ. ஆழத்திற்கு சுரண்டி எடுத்துவிட்டு புதிய மண் கொட்டி பரப்பித் தரையை அமைக்க வேண்டும். கிருமிகள் மற்றும் உண்ணிகளை கட்டுப்படுத்த இது உதவும். மழை நாட்களில் வாரத்திற்கு இரண்டு முறை சுண்ணாம்புத்தூளை தரையில் தெளிக்க வேண்டும். தரையின் ஈரப்பதத்தை சுண்ணாம்பு ஈர்த்து உலரச் செய்வதோடு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.


மரச்சட்ட மேடை வடிவ தரை: ஆட்டுக்குட்டிகளை மண் தரையில் விட்டு வளர்த்தால் மண் நக்குதல் பழகி ரத்தக்கழிச்சல் நோயால் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பனி மற்றும் மழைக் காலத்தில் இரவு வேளையில் மண் தரை குளிர்வாக இருப்பதால் ஆட்டுக் குட்டிகள் குளிர் தாங்காமல் சளி பிடித்து இறந்துவிட வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஆட்டுக்குட்டிகளை தரையில் விடாமல் மூன்று மாத வயதுவரை மரச் சட்டங்களினால் ஆன பரண்மீது விட்டு வளர்ப்பது நன்று. இம்மரச்சட்ட பரண் தரையிலிருந்து அடி உயரத்தில் இருக்க வேண்டும். இரு சட்டங்களுக்கு இடையே 1.5 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். இந்த சந்தில் அடியில் உள்ள எருவினை சேகரித்துக்கொள்ளலாம்.


மரச்சட்டங்களின் அகலம் மற்றும் தடிமண் (கனம்) முறையே 2-4 இன்ச்கள் மற்றும் 1-2 இன்ச் இருத்தல் நலம். தைல மரச்சட்டங்கள் பரண் அமைக்க ஏதுவானவை. தற்பொழுது நவீன முறையில் கொட்டகை அமைக்க மரச்சட்டங்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக்கினால் ஆன சட்டங்களைக் கொண்டும் ஆட்டுக்கொட்டகையில் தரை அமைக்கலாம். இவை சுத்தம் செய்ய எளிதாகவும் அதிக நாள் உழைக்கும் திறனும் கொண்டது.
தீவனப்பெட்டிகள்: அடர்தீவனம்உலர்தீவனம் மற்றும் பசுந்தீவனங்களை ஆடுகளுக்கு அளிக்கக்கூடிய வகையிலும் ஆடுகள் தின்னும்போது சேதாரம் இல்லாமல் இருக்க வேண்டியும் தீவனப்பெட்டிகள் இருக்க வேண்டும். மரப்பலகைதுத்தநாகத் தகடுகுறுக்கு வெட்டாக பிளக்கப்பட்ட பிளாஸ்டிக் டிரம்களைக்கொண்டு தீவனப்பெட்டிகளை உருவாக்கலாம். தீவனத்தைத் தரையில் போடக்கூடாது. ஆடுகள் குளம்புகள்சாணம்மூத்திரம் பட்ட தீவனத்தைச் சாப்பிடாது.

எனவே தீவனங்களைத் தீவனப்பெட்டியில் போடவேண்டும்.
மருந்துக்குளியல் தொட்டி: ஒட்டுண்ணிகளின் தாக்கத்திலிருந்து ஆடுகளைப் பாதுகாக்க குளியல் செய்வது அவசியம். 1.2x1x0.5 மீட்டர் கொள்ளளவு உள்ள குளியல் தொட்டியினை சிமென்ட் கான்கிரீட்டினால் கட்டவேண்டும். கழிவுநீர் வடிய தொட்டியின் அடிப்புறத்தில் துளை இருக்க வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய பண்ணைகள்: நித்தின் பார்ம் - 98422 18412, அம்பாள் ஆட்டுப்பண்ணை-99763 40337.

வாழ்வுக்கு வழிகாட்டும் வான்கோழிகள் வளர்ப்பு

22வெள்ளி,பிப்ரவரி,

பிராய்லர் கோழிகள் மிக மெதுவாக அறிமுகமாகி இன்றைக்கு இறைச்சி என்றால் பிராய்லர் தான் என்றாகி விட்டது. இது போல் இன்னும் குறுகிய காலத்தில் வான்கோழி இறைச்சியும் இறைச்சி பிரியர்களிடம் குறிப்பிடத்க்க இடத்தை பிடிக்கும் என்று கருதப்படுகிறது. எனவே பண்ணை தொழிலில் கவனம் செலுத்துபவர்கள் வான்கோழி வளர்ப்பை இப்பொழுதே தொடங்கினால் சந்தையை தக்க வைத்துக் கொள்ளலாம். வான்கோழிகளை வளர்க்கும் முறை குறித்தும், அதன் லாபம் பற்றியும் தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் டாக்டர்கள் பூவராஜன், உமாராணி மற்றும் பண்ணை முருகானந்தம் ஆகியோர் விவரிக்கிறார்கள்.
" குறைந்த தீவனம் உட்கொண்டு அதிக எடை கூடுவதாலும், குறுகிய காலத்தில் துரிதமாக வளர்ச்சி பெறுவதாலும் வான்கோழி வளர்ப்பு லாபகரமானதாக இருக்கிறது. தோப்புகள், மானவாரி நிலங்களில் பண்ணைகளை அமைக்கலாம். இறைச்சிக்காக இவற்றை வளர்க்கும் போது கீழ்க்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும்.
பண்ணையில் கொட்டகை அமைத்தல்
ஒரு வான்கோழிக்கு 3 முதல் 4 சதுர அடி இடம் என்ற கணக்கில் 500 வான்கோழிகளுக்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 சதுர அடியில் 20 அடி அகலத்தில் கொட்டகைகளை கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். உள்புறம் சிமெண்ட் பூச்சு அவசியம். பக்கவாட்டில் ஒன்றரை அடி உயரத்தில் சுவர் எழுப்பி அதற்கு மேல்  அடி அளவுக்கு கம்பி வலை பொருத்த வேண்டும். தரையில் நெல் உமி அல்லது தென்னை மஞ்சியை பரப்ப வேண்டும்.
குஞ்சுகள் வாங்கி பராமரித்தல்
வான்கோழி இனத்தில் இறைச்சிக்கான சிறந்த இனங்களாக அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ், சிலேட்டு நிற கலப்பினம் அல்லது பெல்ஸ்வில்லி கலப்பினம் ஆகிய இனங்களை நம்பிக்கையான இடத்தில் வாங்க வேண்டும். ஒரு மாத குஞ்சுகளாக வாங்கி வளர்த்தல் நல்லது. ஏனென்றால், புதிதாக பண்ணை தொடங்குவோர் அவற்றை பராமரிக்க ஆலோசனை மற்றும் குஞ்சு பராமரிப்பு என இறப்பு சதவீதத்தை கட்டுப்படுத்தலாம்.
வான்கோழி குஞ்சுகளை அடைகாப்பானில் வைத்தல்
இளம் குஞ்சுகள் முதல் 3 வார வயது வரை செயற்கை வெப்பம் அளித்தல் வேண்டும். இதற்கு ஒன்றரை அடி உயர அட்டை அல்லது தகட்டினை 6 அடி விட்டத்திற்கு வைக்க வேண்டும். அடைகாப்பானின் நடுவில் தரையிலிருந்து 2 அடி உயரத்தில் மின்விளக்குகள் பொருத்தி எரிய விடவேண்டும். ஒரு 6 அடி விட்டமுள்ள அடைகாப்பானுக்குள் 150 குஞ்சுகள் வரை விடலாம். குஞ்சுகளுக்கு நாள் ஒன்றிற்கு 5 அல்லது 6 முறை தீவனம் சிறிது சிறிதாக வைக்க வேண்டும்.
வான் கோழி குஞ்சுகளுக்கு தீவனம் வைத்தல்
வான்கோழி குஞ்சுகளுக்கு முதல் 4 வாரங்களுக்கு 28 சதவீதம் புரதம் அடங்கிய தீவனம் அளிக்க வேண்டும். 
மாதிரி தீவனம்
மக்காசோளம்/ கம்பு - 40 சதவீதம், சோயாபுண்ணாக்கு- 38%, மீன்தூள்- 95%, தவிடு வகைகள்- 10%, எண்ணெய்- 1%, தாதுஉப்பு- 3%, உயிர்சத்துகள்- 50 கிராம்.
நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு
இதில் மேற்கூறிய தீவனத்தில் மக்காச்சோளம்/கம்புவின் அளவை 45 சதவீதமாகவும், பிண்ணாக்கின் அளவை 8 சதவீதமாக குறைத்தும் தாதுஉப்பின் அளவு அரை சதவீதம் கூட்டியும் தயாரித்தல் வேண்டும்.
8 முதல் 12 வாரங்களுக்கு
மக்காச்சோளம்/கம்பு- 45%, சோயாபுண்ணாக்கு- 31%, மீன்தூள்-10%, தவிடு-10%, எண்ணெய் 1%, தாதுஉப்பு மற்றும் உயிர் சத்துகள் 4%.
தீவனங்கள் பெரும்பாலும் குஞ்சுகள் வாங்கும் இடத்தில் 3 முதல் 4 மாதத்திற்கு தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. குச்சி தீவனமாக இருப்பின் நல்லது. காரணம் இதில் அனைத்து சத்துகளும் சமசீரான அளவில் கிடைக்கிறது. தீவனம் வீணாவது குறைவு. தீவன மாற்று திறன் அதிகரிக்கிறது.
நோய் பராமரிப்பு
குஞ்சுகளுக்கு முதல் வார வயதில் ராணிகெட் நோய் தடுப்பு மருந்தும், பின்னர் அம்மை தடுப்பு ஊசியும் 1 மாத இடைவெளியில் அளித்தல் அவசியம். தீவனத்தில் ரத்த கழிச்சல் நோய்க்கான தடுப்பு மருந்தையும் 3 வது வார வயதில் அளிக்க வேண்டும்.
வான்கோழி இறைச்சி விற்பனை 
வான்கோழிகளை 12 முதல் 16 வார வயதில் விற்பனை செய்து முடித்திட வேண்டும். 9 முதல் 12 வார வயதில் 3 கிலோ எடையும், 11 வார வயதில் 4 முதல் 5 கிலோ எடையும் இருக்க வேண்டும். தீவனம் முறையே 4 கிலோவும், 6 கிலோவும் உட்கொண்டிருத்தல் வேண்டும். இந்த வயதிற்கு பிறகு இறைச்சி முற்றி விடுவதால் உண்பதுற்கு மிருதுவாக இருக்காது. ஆகவே வான்கோழிகளை 12 முதல் 16  வார வயதிற்குள் உள்ள இறைச்சியாக இருக்கும் போது விற்பதும், வாங்குவதும் நல்லது. பிரியாணி உள்பட பிராய்லர் இறைச்சி மூலம் தயாரிக்கப்படும் அனைத்து அயிட்டங்களையும் வான்கோழி இறைச்சியிலும் பண்ண முடியும். 

திட்ட அறிக்கை

தோப்புகளில் 1 மாத குஞ்சுகளாக 500 குஞ்சுகள்வளர்க்க
( 1 குஞ்சு ரூபாய் 150 வீதம்)                            - 75 ஆயிரம்

அன்றாட செலவுகள்                                  
தீவன செலவு ( ஒரு குஞ்சுக்கு 15 ரூபாய் என்ற அளவில்)
500 குஞ்சுகளுக்கு                                     - 45 ஆயிரம் 

பண்ணையாள் கூலி                                   - 8 ஆயிரம்
( மாதம் 2 ஆயிரம் வீதம் 4 மாதங்களுக்கு)

தடுப்பு மருந்துகள் ( ஒரு குஞ்சுக்கு 1. 50 காசு வீதம்)        -  750 ருபாய்.
இதர செலவுகள்                                       - 1, 200 ருபாய்.

ஆக மொத்தம்                                         - 54 ஆயிரத்து 950 ரூபாய்.

வருமானம்
500 கோழிகள் ( 4 கிலோ எடையில்)
1 கிலோ எடையுள்ள கோழி 120 ரூபாய் என்ற விலையில்    - 2 லட்சத்து 28 ஆயிரம்

நிகர வருமானம்

ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் - 54 ஆயிரத்து 950 = 1, 33 ஆயிரத்து 525.
 நிகரலாபமானது தீவன செலவு, மருந்துகள் செலவு மற்றும் விற்பனை விலையை பொறுத்து பண்ணைக்கு பண்ணை மாறுபடும். இதனை கவனத்தில் கொண்டு விற்பனை வழிமுறைகளை எளிதாக்கி குறிப்பிட்ட கால அளவில் குஞ்சுகளை இறைச்சிக்கென்று விற்பனை செய்து சிறந்த லாபம் பார்த்திடலாம். வான்கோழி இறைச்சி இன்னும் குறுகிய காலத்தில் உணவில் சிறப்பான இடத்தை பிடிக்கவுள்ளது. எனவே இப்போதே பண்ணையை தொடங்கிவிடலாம்.

நல்ல லாபம் தரும் எளிய தொழிலான வண்ணக்கோழி வளர்ப்பு




சிறிய இடம் இருந்தால் கூட அதில் ஒரு லாபகரமான தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். வண்ணக் கோழி வளர்ப்பு இத்தகைய ஒரு தொழில் வாய்ப்பு ஆகும். நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக் கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வண்ணக் கோழி இனங்கள் பார்ப்பதற்கு நாட்டுக் கோழி போன்றே காணப்படும். ஆனால் இவற்றுக்கு நாட்டுக் கோழிகளை விட பல சிறப்பான இயல்புகள் உண்டு. குறிப்பாக இந்த வகை கோழிகளுக்கு கரையான்களை உணவாக பயன்படுத்துவதன் மூலம் இவை எளிதில் அதிக புரதச்சத்தை பெற்று வேகமாக எடை அதிகரிக்கும். இந்த கோழிகளை புறக்கடையில் வளர்ப்பதன் மூலம் வீட்டில் உள்ள பெண்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், நிலமற்ற விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோர் பொருளாதார வளத்தை பெறலாம்.
சிறப்பு அம்சங்கள்
வண்ணக் கோழி வளர்ப்பில் ஈடுபடும் முன்பு அவற்றின் சிறப்பம்சங்களை அறிந்து கொள்வது நல்லது. 
1. நாட்டுக் கோழிகளை விட துரிதமாக எடை கூடும்.
2. நாட்டுக் கோழி இறைச்சியின் சுவையை விட அதிக சுவையுள்ளது.
3. எல்லா இடங்களிலும், எல்லா தட்பவெப்ப நிலைகளையும் தாங்கி வளரக் கூடியது.
4. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
5. அதி நவீன வளர்ப்பு முறைகளை பயன்படுத்தி வளர்க்க தேவையில்லை. சாதாரண நாட்டுக் கோழி போல் புறக்கடை வளர்ப்பாக வளர்க்க முடியும்.
6. நாட்டுக் கோழிகளை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியும், அதிக முட்டைகள் இடும் திறனும் கொண்டது. இதன் முட்டைகள் நாட்டுக் கோழி முட்டைகளை போலவே பழுப்பு நிறம் கொண்டதால் நாட்டுக் கோழி முட்டைகளின் விலைக்கே விற்பனை செய்யலாம்.
கரையான் உணவு
கரையான்களில் 36 சதவிகிதம் புரதம், 44 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. இவை இரண்டும் கோழியின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் வளர்ச்சி விகிதம் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. இதனால் தீவனச் செலவு பெரும்பகுதி குறைந்து விடும். கரையான்களை வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யலாம். கிழிந்த கோணிப்பை, பழைய துணி, காய்ந்த மாட்டு சாணம், உலர்ந்த இலை, இற்றுப் போன மரக்கட்டைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மண்பானைக்குள் போட்டு அந்த பானையில் அடைத்து, நீர் தெளித்து தரையில் கவிழ்த்து வைக்கவும். 24 மணி நேரத்தில் இதில் கரையான் உற்பத்தி ஆகி இருக்கும். 
உற்பத்தி ஆவதில்லை
கரையான்களில் உற்பத்தியானது அடைமழைக் காலங்களில் மட்டும் பாதிக்கப்படுவதுண்டு. இது தவிர பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட இடங்களில் கரையான்கள் உற்பத்தி ஆவது இல்லை. இது தவிர, எறும்பு புற்று அதிகமாக உள்ள இடங்களிலும் கரையான்கள் உற்பத்தியாகாது. எனவே, கரையான்களை உற்பத்தி செய்ய முற்படும் போது இது போன்ற இடங்களை தவிர்க்க வேண்டும். 
தீவனங்கள்
வண்ணக் கோழிகளுக்கு கரையான்களை தவிர வழக்கமான தீவனங்களை அளித்து வளர்க்கலாம். கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு ஆகியவற்றை 30 முதல் 35 பங்கும், கடலைப் புண்ணாக்கு 15 பங்கும், தவிடு வகைகள் 15 பங்கும், சமையலறை கழிவுகள் 5 சதவிகிதமும், கரையான் 10 பங்கும், புளியங் கொட்டை 10 பங்கும், கருவாட்டு தூள் 5 பங்கு, தாதுப்பு 1 பங்கு மற்றும் வைட்டமின் கலவை 1 பங்கும் எடுத்து நன்றாக இவற்றை கலந்து கொண்டு கோழி தீவனம் தயாரிக்கலாம். 
இவை தவிர வேலிமசால், குதிரைமசால் மற்றும் அசோலா போன்ற நீலப்பச்சை பாசியை 5 முதல் 10 சதவிகிதம் அறுவடை செய்து கொடுக்கலாம். வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களை உற்பத்தி செய்ய பெரிய அளவில் இடவசதி தேவையில்லை. ஒரு தடவை நட்டால் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து இவற்றை அறுவடை செய்து பசுந்தீவனம் தயாரிக்கலாம்.
நோய்கள் பராமரிப்பு
வண்ணக் கோழிகளை வளர்க்க முற்படும் போது அவற்றை நோய்களில் இருந்து பாதுகாக்க தகுந்த காலகட்டத்தில் தடுப்பூசிகளை அளிப்பது நல்லது. இந்த குஞ்சுகளுக்கு பிறந்த 6 வது நாள் லசோட்டா தடுப்பூசியும், 12 வது நாள் கம்போரா தடுப்பூசி, 27 ம் நாள் மீண்டும் லசோட்டா தடுப்பூசியும், இரண்டாவது மாதத்தில் இராணிகெட் தடுப்பூசியும், தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை இராணிகெட் கே தடுப்பூசி அளிக்க வேண்டும்.
ஒப்பீடு 
வண்ணக் கோழிகளை நாட்டுக் கோழிகளுடன் ஒப்பிடும் போது வண்ணக் கோழியே பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கிறது. வண்ணக் கோழிகள் நாட்டுக் கோழிகளை விட வேகமாக உடல் எடை அதிகரிக்கிறது. அதாவது நாட்டுக் கோழிகள் 8 வார கால அளவில் 600 முதல் 800 கிராம் எடை அளவே உடலின் எடை கூடுகிறது. ஆனால் வண்ணக் கோழிகள் இதே 8 வாரங்களில் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 கிராம் எடையை அடைகிறது. அதே போல் நாட்டு கோழிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 70 முட்டைகள் வரை இடுகிறது. ஆனால் வண்ணக் கோழிகள் 100 முதல் 120 முட்டைகளை இடுகிறது. மேலும் நாட்டுக் கோழி முட்டையின் எடை 45 முதல் 50 கிராம் அளவே இருக்கிறது. ஆனால் வண்ணக் கோழிகளின் முட்டையின் எடையானது 55 முதல் 65 கிராம் வரை இருக்கிறது. இது போல் பலவிதங்களில் ஒப்பீடு செய்து பார்த்த நிலையில் வண்ணக் கோழிகள் முதலிடத்தை பெறுகின்றன. எனவே, நாட்டுக் கோழி வளர்ப்பில் இறங்க விரும்புபவர்கள் பண்ணையின் ஒரு பகுதியாக வண்ணக் கோழிகளையும் சோதனை அடிப்படையில் வளர்த்து பின்னர் பெரிய அளவில் இதே கோழிகளை வளர்த்து லாபம் பெறலாம்.
டாக்டர்.பூவராஜன்,கு.சுகுமார் மற்றும் ஜான்சன் ராஜேஸ்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்.




இன்குபேட்டர் மின்சார குஞ்சு பொரிப்பான் கோழி வாத்து மற்றும் அனைத்து வகை முட்டைகளைப் பொரிக்க வைக்க



   Contact Suppiler   


yarasoolgoatfarm@gmail.com
hajamohinudeen20062@gmail.com
hajamohinudeen2006yahoo.co.in
+918973908930