யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ஆடு வளர்ப்பு -லாபம் நிரந்தரம்!


நீங்களும் ஒரு தொழிலதிபர் ஆகலாம். ஆடுவளர்ப்பின் மூலம் ஆயிரம் ஆயிரமாய் அள்ளலாம்..!



talaseri goat
தலசேரி இன பெட்டை ஆடு-குட்டியுடன்
 வான்கோழி, காடை, ஈமு என வகை வகையாக இறைச்சிகள் இருந்தாலும், நாட்டுக்கோழிக் கறிக்கும் வெள்ளாட்டுக் கறிக்கும் உள்ள மவுசு குறைவதேயில்லை. எப்போதுமே சந்தையில் அவற்றுக்கான கிராக்கி உச்சத்தில்தான். அவற்றின் விலையே இதற்கு சாட்சி. அதனால்தான் விவசாயத்தோடு சேர்த்து, ஆடு, கோழி என வளர்க்கும் பழக்கம் தொன்று தொட்டே தொடர்கிறது.

ஆரம்ப காலங்களில் நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழிகள் என்று இருந்ததெல்லாம் காலமாற்றத்திற்கு ஏற்ப கலப்பினங்களாக உருவெடுத்துவிட்டன. இத்தகைய கலப்பினங்கள் இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன.

ஆராய்ச்சிக் கூடங்களில் வெளிநாட்டு இனங்களோடு உள்நாட்டு இனங்களைக் கலப்பு செய்து வளர்ச்சி ஊக்கிகளை செலுத்தி அதிக இறைச்சி, கொழுப்புடன் கூடிய ஆடு, கோழி ரகங்களை உருவாக்குவது ஒரு விதம். இதற்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. பலவித சோதனைகளுக்குப் பிறகே இவை சந்தைப் பயன்பாட்டுக்கு வரும். இவற்றுக்குத் தனியாக பெயர்கூட வைப்பார்கள்.

goat business
ஆடுகள் தீவனமெடுக்கும் காட்சி

அடுத்து… விவசாயிகளே நாட்டின் வேறு பகுதிகளை, மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு இனங்களை வாங்கி இயற்கையான முறையில் கலப்பு செய்து, புதிய ரகங்களை உருவாக்கிக் கொள்வது இன்னொரு விதம். இதற்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. மரபணு சோதனைகளோ, வேறு பிரச்சனைகளோ கிடையாது.

கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள பலரும் பெருபாலும் இரண்டாவதான சிக்கலில்லாத இயற்கை முறையையே அதிகம் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக தலைச்சேரி, ஜமுனாபாரி, சிரோஹி போன்ற வெளி மாநில ஆடுகளோடு நம் மாநில வெள்ளாடுகளைக் கலப்பு செய்து அதன் மூலம் நல்ல தரமான ஆடுகளை உற்பத்தி செய்து பலரும் லாபம் பார்க்கிறார்கள்.

பிறக்கும் போதே அதிக எடை சாதாரணமாக கொடி ஆட்டுக்குட்டி பிறக்குற போது ஒன்றரைக் கிலோ தான் எடை இருக்கும். எட்டு மாசத்துல தான் பதினைஞ்சு கிலோ எடைக்கு வரும். இதுவே கலப்புக் குட்டிகள்னா… பிறக்குறப்பவே ரெண்டரை கிலோ இருக்கும். நாலு மாசத்துலயே பத்து கிலோவுக்கு மேல எடை வந்துடும். எட்டு மாசத்துல முப்பது கிலோ வரைக்கும் கூட வந்துடும்.
goat growing
சினைஆடு-தீவனம் எடுத்துக்கொள்ளும் காட்சி

பொதுவா பத்து பன்னெண்டு கிலோ இருக்கிற ஆட்டுக்கு 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபா வரைக்கும் விலை கிடைக்கும். கொறஞ்சது ஆறு மாசமாவது கொடி ஆட்டை வளர்த்தாதான் அந்த விலை கிடைக்கும். ஆனா, கலப்பின ஆட்டுக்கு நாலு மாசத்திலேயே இந்த விலை கிடைக்கும்’ என்று ஆடு வளர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

1 ஆட்டுக்கு 15 சதுரடி!

வளர்ந்த ஒரு ஆட்டுக்கு பதினைந்து சதுர அடி இடம் தேவைப்படும். நாம் வளர்க்க எண்ணும் ஆடுகளுக்கேற்ற அளவில் பட்டி அமைத்துக் கொள்ளலாம். செம்மறி ஆடாக இருந்தால், நைலான் வலையிலேயே பட்டி அமைக்கலாம். வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் அமைக்க வேண்டும்.

பட்டிக்குள் கிடாக்கள், குட்டிகள், சினை ஆடுகள், வளரும் ஆடுகள் என தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனிக் கொட்டகைகள் அமைக்க வேண்டும்.
jamunapari_pettai_goat
இனம்: ஜமுனாபாரி (பெட்டைஆடு)

தண்ணீர் கவனம்!

காலை ஒன்பது மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, கொட்டகைகளை சுத்தம் செய்துவிட வேண்டும். பதினோரு மணி அளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். பின் கடலைப் பிண்ணாக்கு ஊறவைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும். தோட்டங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் குடிக்கவிட்டால் நோய்கள் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வெயில் நேரத்தில் மேய்ச்சல் வேண்டாம்

வெயில் அதிகமாக அடிக்கும் மதிய நேரத்தில் ஆடுகளை மேய விடும் போது சோர்ந்து விடும். அந்த நேரங்களில் பட்டியில் அடைத்து விட்டு வேலிமசால், முயல் மசால், கோ-4, மாதிரியான பசுந்தீவனங்களை நறுக்கிப் போட வேண்டும். தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது. பகல் மூன்று மணிக்குப் பிறகு  ஐந்தரை மணிவரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் போட வேண்டிய தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு வர வேண்டும்.

இரண்டு வருடத்தில் மூன்று ஈற்று எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பெட்டை ஆடுகள் பருவத்துக்கு வந்து விடும். அந்த சமயத்தில் நல்ல தரமான கிடாக்களோடு சேர்த்து விட வேண்டும். ஆட்டுக்கு சினைப் பருவம் ஐந்து மாதங்கள். குட்டி போட்ட இரண்டு மூன்று மாதங்களில் அடுத்த பருவத்திற்குத் தயாராகிவிடும்.

எட்டு மாதத்திற்கு ஒருமுறை குட்டி ஈனுவதால், சராசரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும். ஒரு ஈற்றுக்கு இரண்டுக் குட்டிகள் கிடைக்கும். நாற்பது நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்க விட்டு பிறகு பிரித்துவிட வேண்டும். அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும்.
sirohi Male goat
சிரோஹி இன கிடாய்

Jamunaparipettaiaadu
ஜமுனாபாரி இன பெட்டை ஆடு

thalaiseri pettai aadu
தலசேரி இன பெட்டை ஆடு


கீழே காணப்படுபவை ஆடுகளுக்காக வளர்க்கப்படும் தீவன வகைகள்: தீவனசோளம், மக்காச்சோளம், வேலிமசால், சீமைபுல் போன்றவை.




நிறையிருந்தால் பாராட்டுங்கள்.. குறையிருந்தால் குறிப்பிட்டுச் சொல்ல உங்களைத் தவிர யார் இருக்கமுடியும்? தயவுசெய்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கு இடவும்..
ஹலால்(Halal) என்றால் என்ன ??

இன்று ஒரு தகவல்(பக்கம்) 

பொது மக்கள் சிந்தனையில் மிக நீண்ட நாட்களாக ஓடி கொண்டிருக்கும் கேள்வி இது ? பெரும்பாலான அசைவ உணவகங்களில் குறிப்பிட்டிருக்கும் 100 % (ஹலால்) - நம்மவர்கள் பெரும்பாலனவர்கள் நினைப்பது சுத்தம் என்றுதான் . அதன் உண்மை விளக்கம் தான் என்ன வாருங்கள் அலசுவோம் !!!

சுருக்கமாக ஹலால் என்பது கால்நடைகளை அறுக்கும் போது அதன் கழுத்து பகுதி முழுவதும் அறுபடாமல் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுபதால் ,அதன் வலியை உணர்த்தும் நரம்புகள் துண்டிக்க பட்டு வலியை உணராமல் இருக்க செய்வதே ஹலால் ஆகும் . இப்படி அறுக்கும் போது அதன் முழு ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல் தடுக்கபடுகிறது. இதற்கு மற்றுமொரு காரணம் இறைவன் அனுமதி படி அறுபது என்பது பொருள் 

ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்:-

A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.

கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.

B.
மேற்படி ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்.

இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் ?

அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.

D. கிருமிகளும் நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே !

கிருமிகளும் நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. ஹலால்முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.

E. . ஹலால் முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

F. ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கால்நடைகள் வலியை உணர்வதில்லை.

இதன் முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் உடலில் உள்ள சதைப்பாகங்கள் இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் துள்ளுவதாகவும் துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.

இதை உண்மை படுத்தும் விதமாக ஹலால் முறையில் அறுக்க பட்ட உயிரினமும் ,வேறு விதமாக (தலை துண்டிக்கப்பட்டு ) அறுக்க பட்ட உயிரினங்களை விட ஹலால் கால்நடைகள் மிக குறைந்த (painless dead ) வலியை உணர்வதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது ..

மேலும் தகவல்கள் இருந்தால் கருத்துக்களில் பதியவும் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆடுகளைத் தேர்ந்தெடுத்தல்


கிடாக்கள் மந்தையில் பாதி என்பார்கள். சுமார் 30 முதல் 50 ஆடுகளுக்கு ஒரு பொலி கிடா போதுமானது. பொலி கிடாவை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை.
மற்றவர்கள் பண்ணையில் தேர்வு செய்யும்போது
  •  நல்ல ஆரோக்கியமானதாகவும், சுறுசுறுப்பாகவும், வயதிற்கு தகுந்த நல்ல வளர்ச்சியுள்ளதாகவும், நல்ல எடையுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.
  • கிடாக்கள் உயரமாகவும், உடல்நீளமாகவும், மார்பு அகன்றதாகவும், விரிந்த மார்பெலும்புகளைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.
  •  கிடாக்களின் பின்னங்கால்கள் நன்கு திடமாக இருத்தல் வேண்டும்.
  • கால்கள் நேராக இருக்க வேண்டும்.
  • கிடாக்கள் வீரியத்துடன் பொலிவு செய்யும் திறன் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
  • ஒரு விதைப்பையினுள் இரண்டு ஒரே அளவுள்ள விதைகள் இருக்க வேண்டும். விதைப்பையின் சுற்றளவு குறைந்த பட்சம் 25-35 செ.மீட்டராவது இருக்க வேண்டும்.
  • ஒரு விதையுள்ள கிடாக்களை வாங்கக்கூடாது.
  • இனத்திற்கான பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.

சொந்த பண்ணையில் தேர்வு செய்யும்போது
மேற்கண்ட குணங்களுடன்,
  • 2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டின் குட்டிகளிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.
  • நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான குட்டிகளை 6 மாதவயதில் தேர்வு செய்ய வேண்டும்.
  •  3-4 சதவீத குட்டிகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • சுமார் 9 முதல் 12 மாதங்களில் பருவமடைந்திருக்க வேண்டும்.  

பெட்டை ஆடுகளைத் தேர்ந்தெடுத்தல்
மற்றவர்கள் பண்ணையில் தேர்வு செய்யும்போது
  • தலை குறுகியதாகவும், கழுத்து மெலிந்தும், உடல் நீளமாகவும் இருக்க வேண்டும்.
  • நன்கு வளர்ச்சியடைந்த, மிருதுவான மடி உடலுடன் நன்கு ஒட்டியிருக்க வேண்டும்.
  • மிருதுவான மற்றும் பால் கறந்தவுடன் சுருங்கக்கூடிய பால் காம்புகளாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட காம்புகள் உள்ள ஆடுகளை வாங்கக்கூடாது.
  • முதுகுப்புறமும், பின்பகுதியும் அகன்று விரிந்து இருக்கும் ஆடுகளை வாங்க வேண்டும்.
  • நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான பெட்டை ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். 

சொந்த பண்ணையில் தேர்வு செய்யும்போது
மேற்கண்ட குணங்களுடன்,
  • பெட்டை ஆடுகள் 6 முதல் 9 மாதங்களில் பருவமடைந்திருக்க வேண்டும்.
  • ஒரு ஈற்றில் 2  ஈனும் ஆடுகளின் குட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான பெட்டை குட்டிகளை 3 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும்
  • 30-35 சதவீத குட்டிகளைத் தேர்வு செய்ய வேண்டும். 

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலைஎன்ற பழமொழிக்கேற்ப நல்ல தரமான ஆட்டுக்குட்டிகளைப் பெறுவதற்கு நல்ல பெட்டை ஆடுகளும், தரமான பொலிக் கிடாக்களும் மிகவும் அவசியம். பொதுவாக பொலி கிடாக்கள் நல்ல குட்டிகளை உருவாக்குவதில் 80-90 பங்கு வகிக்கின்றன. ஆகவே அதிக விலையில் நல்ல பொலி கிடாக்களை வாங்க வேண்டும்.

ஆடுகளின் ஆயுட்காலம் 10-12 வருடங்கள் ஆகும். 5 -7 ஆண்டுகள் வரை பண்ணையில் லாபகரமாக வளர்த்தலாம். ஆடு வளர்ப்போர் ஆடுகளின் பற்களைக் கொண்டு வயதை தீர்மானித்து கீழ்க்கண்ட பயன்களை அடையலாம்.
·                     -  ஆடுகளை வாங்கும்போது அதன சரியான வயதைக் கண்டறிந்து இடைத்தரகர்கள் மூலம் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கலாம்.
·                              -  சரியான வயதில் ஆடுகளை விற்பனைக்கு அனுப்பலாம்.
·                       -  வயதான மற்றும் உற்பத்தித் திறனற்ற ஆடுகளைக் கண்டறிந்து அவற்றை பண்ணையிலிருந்து நீக்கம் செய்யலாம்.
·                              -   ஆடுகளைக் காப்பீடு செய்வதற்கு வயதை நிர்ணயிப்பது மிக அவசியமாகும்.

ஆடுகளில் வெட்டும் பற்கள், முன் தாடைப் பற்கள் மற்றும் பின் தாடைப் பற்கள் (அரைக்கும் பற்கள்) காணப்படுகிறது. ஆடுகளின் மேல் தாடையில் வெட்டும் பற்கள் காணப்படுவதில்லை. அதற்கு பதிலாக ஈறு மட்டுமே காணப்படும். கீழ் தாடையில் பக்கத்திற்கு 4 வீதம் 8 வெட்டும் பற்கள் காணப்படும். கீழ் தாடையின் உதடுகளை விலக்குவதன் மூலம் இந்த பற்களைக் காணலாம். பொதுவாக வெள்ளாடுகளில் 20 தற்காலிகப் பற்களும், 32 நிரந்தரப் பற்களும் காணப்படும். மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் கீழ்க்கண்டவாறு பற்கள் காணப்படும்.

வெட்டும் பற்கள்
முன்தாடைப் பற்கள்
பின்தாடைப் பற்கள்
மொத்தம்
தற்காலிகப் பற்கள்
0/8
6/6
0/0
6/14
நிரந்தரப் பற்கள்
0/8
6/6
6/6
12/20

      ஆடுகளை வெளியில் இருந்து வாங்கும்போது அதன் பற்களின் அமைப்பு மற்றும் எண்ணிக்கையை வைத்துதான் வயதைக் கண்டறிய முடியும்.

தற்காலிகப் பற்கள் (அ) பால் பற்கள்
நிரந்தரப் பற்கள்
சிறியதாக, நீள் செங்குத்தாக இருக்கும்
முன் பகுதி அகன்றும், பின் பகுதி குறுகியும் காணப்படும். வயது அதிகரிக்கும்போது பற்கள் தேய்ந்து முன் பகுதி கூறாக மாறி விடும்.
பற்களுக்கு இடையில் இடைவெளி இன்றி காணப்படும்.
ஒரு பல்லிற்கும் அடுத்த பல்லிற்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்கும்.

வயது
பற்களின் அமைப்பும் எண்ணிக்கையும்
பிறந்தவுடன்
0-2 ஜோடி பால் பற்கள்
6-10 மாதம்
கீழ்த் தாடையின் முன்புறம் 8 முன் பற்கள் இவை அனைத்தும் பால் பற்கள்
11/2 வயது
நடுவில் உள்ள இரண்டு முன் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும்
2-21/2 வயது
நான்கு நிரந்தரப் பற்கள் காணப்படும்
3-31/2 வயது
ஆறு நிரந்தரப் பற்கள் காணப்படும்
4 வயது
எட்டு நிரந்தரப் பற்கள் காணப்படும்
6-7 வயது
பற்கள் விழுந்து விடும்

பரண் மேல் ஆடு வளர்ப்பு

  • வெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும். 
  • பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினால் ஆன பரண் போன்ற அமைப்பின் மேல் வளர்க்கப்படுகிறது.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு கொட்டகை தரையிலிருந்து உயரமான இடத்தில் குறைந்த்து 4 - 5 அடி உயரத்தில் இருப்பதால் ஆட்டு சாணி மற்றும் சிறுநீர் போன்றவை கீழே சேகரமாகிறது. ஆதலால் தினமும் சுத்தம் செய்யும் பணி மிகவும் குறைவாக இருக்கிறது.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையில் வளர்ப்பதால் ஆடுகள் சுகாதரமாகவும் நோய் பரவும் தன்மை குறைவாகவும் இருக்கும்.
  • வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலே பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கப்படுகிறது.
  • வெள்ளாடுகளுக்கு ஏற்ற பசுந்தீவன பயிர்கள்- கோ 3 , கோ 4, கோ எப் எஸ் 29 , அகத்தி, கிளிசீடியா, வேலி மசால்.
  • வெள்ளாடுகளுக்கு அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் - ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி (PPR ), துள்ளுமாரி நோய் தடுப்பூசி (ET)மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி (FMD). கால்நடை மருத்துவர்களை அணுகி தகுந்த நேரத்தில் தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம்.
  • வெள்ளாடுகளுக்கு குடற்புழுநீக்கம் செய்யும் முறை. --- புதிதாக வாங்கி வரும் வெள்ளாடுகளை தனியாக பிரித்து வைத்து குடற்புழு நீக்கம் செய்த 15 நாட்களுக்கு பிறகே பண்ணை வெள்ளாடுகளுடன் சேர்க்கவேண்டும். குடற் புழு நீக்க மருந்துகளில் பலவகை உண்டு. அவைகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சுழற்சி முறையில் கொடுக்கவேண்டும். அப்போது தான் அனைத்து வகையான குடற்புழுக்களை நீக்கமுடியும். வெள்ளாட்டு குட்டிகள் பசுந்தீவன உண்ண ஆரம்பித்த உடனே குடற்புழுநீக்க மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி சரியான கால இடைவெளியில் கொடுக்கவேண்டும்.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்கும் முன் ஒன்றுக்கு மேற்பட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வரும் பண்ணைகளை பார்வையிடுவதும்  வெள்ளாட்டு பண்ணையாளர்களை கலந்தலோசிப்பதும்  நல்லது.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணைகளில் ஆடுகளை விடுவதற்கு முன்பே பசுந்தீவன பயிர்களை பயிரிட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.