சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க பரப்பு வரம்பு நீக்கம்: சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம்
நாளுக்கு நாள் நீர்த்தேவை அதிகரித்து வரும் நிலையில், சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி, வருங்காலத் தலைமுறைக்கு வளமான நீர்வளத்தை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மேலும், அபரிமிதமாக நீரைப் பயன்படுத்துவதைவிட அளவாக பயன்படுத்தும் போதுதான் நிறைவான மகசூல் பெற முடிகிறது என்பது அறிவியல் பூர்வமாகவும், அனுபவப் பூர்வமாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவேதான் நீர்ச் சிக்கனத்துக்கும், நிறை மகசூலுக்கும் ஒருசேர வழிவகுக்கும் சொட்டு நீர்ப்பாசன முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கி உதவுகிறது.
ஒரு பயனாளிக்கு இதுவரை அதிகபட்ச 100 சதவீத மானியம் ரூ. 43,816ஆக இருந்தது. எனவே, 1.2 மீட்டருக்கு 0.6 மீட்டர் எனக் குறுகிய இடைவெளியில் சாகுபடி செய்யும் காய்கறி போன்ற பயிர்களுக்கு ஒரு ஏக்கர் பரப்பிற்கு மட்டுமே 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க முடியும்.
10 மீட்டருக்கு 10 மீட்டர் இடைவெளியில் நடப்படும் மா போன்ற பயிர்களுக்கு சிறு விவசாயிகளுக்கு 5 ஏக்கரும், குறு விவசாயிகளுக்கு இரண்டரை ஏக்கரும் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கலாம்.
பயிரிடும் பயிரின் இடைவெளிக்கேற்ப 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கும் பரப்பு மாறுபடும். எஞ்சிய பரப்பிற்கு 75 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம் என்று இருந்தது.
ஆனால், தற்போது ஒரு ஏக்கருக்கு ரூ. 43,816-க்கு மிகாமல் சிறு விவசாயி நன்செய் நிலமாயிருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும், புன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கர் வரைக்கும் எந்த பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாய் இருந்தாலும் விருப்பம் இருப்பின் அவருக்குச் சொந்தமாக இருக்கும் பரப்பு முழுமைக்கும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
அதேபோல குறு விவசாயி நன்செய் நிலமாக இருந்தால் ஒன்றேகால் ஏக்கர் வரைக்கும், புன்செய் நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும் எந்த பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாய் இருந்தாலும் விரும்பினால் இருக்கும் பரப்பு முழுமைக்கும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
சிறு, குறு விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலம் முழுமைக்கும் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யார், யார் மானியம் பெறலாம்? வருவாய்த் துறை நில வகைப் பாட்டின்படி நன்செய் நிலமென்றால் இரண்டரை ஏக்கருக்குள்ளும், புன்செய் நிலமென்றால் 5 ஏக்கருக்குள்ளும் சொந்த நிலமுள்ளவர்கள் இம்மானிய உதவி பெறத் தகுதியானவர்கள்.
சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறோ, ஆழ்துளைக் கிணறோ போதிய நீராதாரத்துடன் இருக்க வேண்டும். பொதுவான நீராதாரம் கொண்ட சின்னஞ்சிறு விவசாயிகள் இரண்டு மூன்று பேர் சேர்ந்தும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: பயனாளி விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளுக்குரிய சான்றிதழை வருவாய் வட்டாட்சியரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
நிலத்தின் கணினி பட்டா, சாகுபடி செய்துள்ள அல்லது செய்யவுள்ள பயிர் பரப்பை சர்வே எண்கள் வாரியாகக் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அடங்கல், வயல் வரைபட நகல், இருப்பிட முகவரியைத் தெளிவாகக் குறிப்பிடும் குடும்ப அட்டை நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
வாழை, காய்கறிகள், மிளகாய், மலர் பயிர்கள், பழமரப் பயிர்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகள் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர்களைப் பயன்படுத்தி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பலன் பெறலா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக