அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு
yarasool Goat Farm
Breeder and Supplier of Quality Goats
Email.yarasoolGoatFarm.gmail.com
பசுந்தீவன உற்பத்தி: மூன்று ஏக்கர் விவசாய பூமியை எடுத்து கோ 4 கம்பு நேப் பியர் ஒட்டுப்புல், கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளப்பயிர், வேலி மசால், குதிரைமசால் மற்றும் அகத்தி போன்ற பசுந் தீவனங்க ளைப் பயிரிட்டேன். ஆடுகளுக்கு தேவைப்படும் பசுந்தீவன அளவை கண க்குப் போட்டு, சிறிய சிறிய பாத்திகளை அமைத்து பசுந் தீவனங்களை முறையாகப் பயிரிட்டு வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் பசுந்தீ வனப் பற்றாக்குறை ஏற்படு வது இல்லை.
விற்பனை வழிமுறைகள்: நான் வியாபாரிகளுக்கு ஆடுகளை அறுப் பதற்கு விற்பனை செய்வதற்கு முன்பே எனது ஆடுகளை எடைபோட்டு, அதிலிருந்து வெட்டிய உடல் எடை எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப்போட்டு என்னுடைய ஆட்டின் மதிப் பை தெரிந்து கொண்டு விலை நிர்ணயம் செய்துகொள்வேன். பிறகு வியாபாரியிடம் விற்பனை செய்யும் போது நான் நிர்ண யித்த விலைக்குக் குறைவாக ஆடுகளைக் கொடுக்க மாட்டேன். இவ்வாறு ஆடுகளை விற்பனை செய்வதால் அதிக
லாபம் கிடைக் கிறது. மேலும் உயிருடன் ஆடுகளை விற்பதைவிட அவற்றை இறைச் சியாக மதிப்பூட்டி விற் பனை செய்யும்போது மேலும் அதிக லாபம் கிடை க்கும் என்பதை உணர்ந்து ஆடுகளை அறுக்க ஒரு இடத் தை ஏற்படுத்தி, போதிய வசதிகளைச் செய்து, தேவைப் படும்போது, ஆடுகளை அறுத்து இறைச்சி யாகவும் விற்பனை செய்கிறேன்.
மேலும் ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க ஆர்வமுள்ள பண்ணையா ளர்கள் கீழ்க்காணும் சில முக்கிய விபரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
* ஆட்டுப்பண்ணை தொடங்கும் பண்ணையாளரே அந்தப் பண் ணையின் முதல் வேலையாளாக இருக்க வேண்டும்.
* ஆட்டுப்பண்ணை தொடங்க முதலில் முறையான பயிற்சி அவசியம்.
* பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி அதிக அளவு பயறுவகை மற்றும் மரவகைப் பசுந்தீவனங்களைப் பயி ரிட வேண்டும்.
* உயர்ந்த இனக்கிடாய்களையும், பண்ணை முறையில் வளர்க் கப்பட்ட ஆடுகளையும் தேர்வு செய்து, வாங்கி, பண்ணையை தொடங்க வேண்டும்.
* நோய் தடுப்பு, குடற்புழு மற்றும் ஒட்டுண்ணிகள் நீக்கம் போன்ற பண்ணை நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* குட்டிகளில் இறப்பைத் தடுக்க, குட்டிகள் பராமரிப்பில் அதிக கவ னம் செலுத்த வேண்டும்.
* நாம் வளர்த்த ஆட்டின் மதிப்பைத் தெரிந்துகொண்டு இடைத் தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஏமாறாமல் உடல் எடைக்கு ஏற்ப ஆடுகளை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.
மேற்காணும் வழிமுறைகளை கடைபிடித்து அறிவியல் ரீதியாக ஆடுகளை வளர்த்தால் வெற்றி நிச்சயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக