யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வியாழன், 10 அக்டோபர், 2013

வறட்டி… சாம்பிராணி… அற்புதப் பலன்கள் கொடுக்கும் அடிமாடுகள்.

வறட்டி… சாம்பிராணி… அற்புதப் பலன்கள் கொடுக்கும் அடிமாடுகள்.10/07/2013

எதற்கும் உதவாதவர்களை, ‘அடிமாடு’ என்று திட்டும் வழக்கம் நம்மவர்களிடையே உண்டு. பால் வற்றியப் பசுக்கள், வேலை செய்ய முடியாம வயதானக் காளைகள், எருதுகள் போன்றவற்றிற்கு தீவனம் போட்டு வளர்க்க சங்கடப்படுபவர்கள், இறைச்சிக்காக விற்பனை செய்து விடுவார்கள்.
இப்படிப்பட்ட மாடுகள்தான், அடிமாடுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், இந்த மாடுகளிலிருந்தும் ஏராளமான பயன்களை அடைய முடியும் என்கிற சூட்சமத்தை பலருக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள், திருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலை கிராமத்தில் கோசாலையை நடத்தி வரும், கோ ரக்ஷனசமிதி அறக்கட்டளையினர்.
பால் வற்றிய மற்றும் பயன்படாது என்ற கைவிடப்பட்ட மாடுகளுக்காக கோசாலையை நடத்திவரும் இந்த அமைப்பினர், பசுவின் கழிவுகளில் இருந்து மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிப்பதோடு, ஒப்பந்த முறையில் இயற்கை சாகுபடியை இங்கே செய்து வருகின்றனர்.
இதைப் பற்றியெல்லாம் நம்மிடம் பேசிய கோசாலை நிர்வாகி ஆடிட்டர் குருபிரசாத், இந்த இடத்தில் ஒரு வருடமாக கோசாலை செயல்படுகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தைப் பரப்புவதற்கும், மாடுகளை இறைச்சிக்கு என்று விற்காமல்.. உபயோகமாக பயன்படுத்துவதை சொல்லித் தருவதற்கும்தான் இந்த கோசாலையைத் துவங்கினோம்.
இந்த ஒரு ஏக்கர் இடத்தை, கோசாலைக்காக திருவாவடுதுறை ஆதினம் இலவசமாகவே கொடுத்தார். இதை நாங்க கையில் எடுப்பதற்கு முன் காட்டுக்கருவை மண்டிக் கிடந்தது. மாட்டுக் கொட்டகை, அலுவலகம், பணியாளர்களுக்கான வீடு, சாண எரிவாயுக்கலன், விபூதி தயாரிப்புக் கூடம், வேளாண் கருவிகள் வைப்பதற்கான கூடம் என்ற எல்லாமே இங்க இருக்கு.
இப்போதைக்கு 35 பசு மாடுகள் இருக்கு. இதில் பதினாறு நாட்டுப் பசுக்கள் இருக்கு. எல்லாமே சுற்று வட்டார மக்கள் இலவசமாக  கொண்டு வந்து விட்டதுதான் என்றார்.
தினம் 1 கிலோ பசுந்தீவனம்!
எனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் பசுந்தீவனத்திற்காக … கோ -4  ரக பசுந்தீவனம், வேலி ஓரத்தில் சூபாபுல்  (சவுண்டல்) இரண்டையும் நடவு செய்து, இந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளிடம் ஒப்படைத்தேன். அவங்க தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கிறார்கள்.
கோசாலையில் வேலை பார்பவங்க, பஞ்சகவ்யா, மீன் அமிலம், தேமோர்க் கரைசல், ஐந்திலைக் கரைசல் என்று இயற்கை ஊட்டங்களைத் தயாரித்து, கொண்டு போய், பசுந்தீவன வயலில் தெளித்துவிட்டு வருவாங்க. ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்கு ஒரு கிலோ வீதம் பசுந்தீவனம் கொடுக்கிறோம். மீதி இருக்கும்  பசுந்தீவனத்தை, தோட்டத்தைப் பார்த்துக்கும் இரண்டு விவசாயிகளும் எடுத்துக்குவாங்க. இதை வைத்து, ஆளுக்கு இரண்டு கறவை மாடுகளை அவங்க வளர்த்துட்டிருக்காங்க.
கோசாலை மாடுகளை காலையில் எட்டு மணியிலிருந்து, மதியம் ஒரு மணி வரைக்கும் மேய்ச்சலுக்கு அனுப்புவோம். நல்ல விசாலாமா கொட்டகை அமைத்து தரையில் கருங்கல் பதித்து அதில்தான் மாடுகளைக் கட்டியிருக்கிறோம். கொட்டகையைச் சுற்றி கொசுவலை கட்டியிருக்கிறோம். 10 மின்விசிறிகளையும் போட்டிருக்கிறோம். அதனால், காக்கா, கொசு,ஈ தொந்தரவு இருக்காது. புண் வந்த மாடுகளை தனியாக கட்டிடுவோம். காலாற நடக்க விடவதாலயும், கொட்டகையை சுத்தமாக பராமரிப்பதாலயும் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கிறது.
சமையலுக்கு சாண எரிவாயு
கோசாலையில், 22 ஆயிரம் ரூபாய் செலவில் சாண எரிவாயுக்கலனை அமைத்திருக்கிறோம். இதில் தினமும் 40 கிலோ அளவுக்கு சாணத்தை தண்ணீரில் கலந்து ஊற்றிவிடுவோம். இதில் கிடைக்கும் எரிவாயுவை வைத்துதான் கோசாலையில் வேலை பார்க்கும் 15 பேருக்கு தினமும் சாப்பாடு தயார் செய்கிறோம். இந்தக் கலனில் கிடைக்கும் கழிவுகளை (ஸ்லரி), வீரியமான இயற்கை உரம்.அதை உரக்குழியில் சேமித்து வைத்து… தேவைப்படும்போது பயன்படுத்திக்கிறோம்.
பசுஞ்சாணத்தைப் பயன்படுத்தி, மரபு முறையில் விபூதியும் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். நிறைய கடைகளில் கலப்பட விபூதிதான் விற்கிறார்கள். அதை உபயோகப்படுத்துவதால் அரிப்பு உள்ளிட்ட நோயெல்லாம் வர வாய்ப்பிருக்கு.
சுத்தமான விபூதியை இட்டுக்கொண்டேமேயானால் தலையில் கோர்த்திருக்கும் நீரையெல்லாம் உறிஞ்சுவிடும். இதுதான் ஆரோக்கியமானது. சென்னையில் இருக்கும் சமஸ்கிருத கல்லூரித் தலைவர் விழிநாத ஐயர், அவருக்குத் தேவையான விபூதியை வீட்டிலேயே தயார் செய்து கொள்கிறார். அவரிடம் இருந்துதான் விபூதி தயாரிப்பதை நான் கற்றுக் கொண்டேன். அந்த முறைப்படிதான் இங்கே விபூதி தயாரிக்கிறோம்.
ஈர பசுஞ்சாணத்தைச்  சுத்தப்படுத்தி, அச்சுல வைத்து யாக சாலைக்கான வறட்டியும் தயாரிக்கிறோம். இது, புகை இல்லாமல், ரொம்ப நேரம் எரியும். சென்னை மாதிரியான பெருநகரங்களில் இதுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
கெமிக்கல் சேர்க்காத ஆரோக்கியமான பல்பொடி, மரத்தூள் சேர்க்காத சுத்தமான கம்ப்யூட்டர் சாம்பிராணி எல்லாவற்றையும் தயார் செய்கிறோம். இங்கே தயாராகும் எந்தப் பொருளுமே உடலுக்குக் கெடுதலை வரவழைக்காது.
இங்கே தயாரிக்கும் எதையும் விலைக்கு கொடுப்பதில்லை. கோசாலைக்கு நன்கொடை தருபவர்களுக்கும், ஊர் மக்களுக்கும் இலவசமாகத்தான் கொடுக்கிறோம். விவசாயிகள் உற்பத்தி செய்து கொடுக்கும் பொருட்களை நாங்களே விற்பனை செய்து கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்றார்.
கறவை வற்றிப்போன மாடுகளை அடிமாடாக விலைக்குக் கொடுக்காமல்.. கடைசி வரைக்கும் பராமரித்தால்.. பாலில் கிடைக்கும் அளவிற்கான வருமானத்தை கிட்டத்தட்ட சம்பாதித்து விட முடியும் என்பதற்கு இந்த கோசாலையே சரியான எடுத்துக்காட்டு என்றார்.
இப்படித்தான் தயாரிக்க வேண்டும் இயற்கை விபூதி
இயற்கை விபூதி தயாரிக்க நாட்டுப்பசு மாட்டின் சாணம்தான் உகந்தது. 20 கிலோ சாணத்தை கல், மண் இல்லாமல் சுத்தப்படுத்தி. சின்னச் சின்ன வடை போல் தட்டி, ஒரு வாரம் வெயிலில் காய வைக்க வேண்டும்.
காய்ந்த வறட்டியை துணியில் மூட்டையாகக் கட்டி, பூச்சிகள் தாக்காத அளவுக்கு உயரமான இடத்தில் கட்டித் தொங்கவிட வேண்டும். மூன்று மாதங்களுக்கு பிறகு, 10 அடிக்கு  10 அடி அளவில் செங்கற்களைப் பரப்பி, அதன்மீது நெல் கருக்காவை (பதர்) பரப்ப வேண்டும். பிறகு, காயவைத்த சாணத்தை, தண்ணீரில் நனைத்து, செங்கற்கள் மீது பரப்பி, மீண்டும் கருக்காவைப் பரப்ப வேண்டும்.
இப்படி, கருக்கா, வறட்டி என்ற மாற்றி, மாற்றி, பரப்பி கோபுரம் போல், பத்து அடுக்கு உருவாக்க வேண்டும். அதன் உச்சியில் திருநீற்றுப் பச்சிலைச் செடியை வைத்து, குறைந்த அளவில் சூடத்தை வைத்து மூட்டம் போட வேண்டும். தீ எரியாமல், புகையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் வரை, இப்படி புகைந்து கொண்டிருக்கும். நன்கு வெந்த நிலையில் கெட்டியான விபூதியாகக் கிடைக்கும்.இதை நன்கு இடித்துத் தூளாக்கி, இரவு நேரத்தில் மூன்று நாட்கள் பரப்பி வைத்து, நன்கு சலித்துப் பயன்படுத்தலாம். 20 கிலோ  சாணத்திலிருந்து , 2 கிலோ விபூதி கிடைக்கும். இன்றைய சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ விபூதி குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வறட்சியிலும் வரம் தந்த இயற்கைஎரவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்லப்பா பேசும் போது எனக்கு ஏற்கனவே இயற்கை விவசாயத்தில் ஓரளவுக்கு ஆர்வம் இருந்தது. ஆனாலும் ஏதோ ஒரு தயக்கத்தினால் இயற்கை விவசாயத்திற்கு மாறாமலே இருந்தேன். கடந்த ஆண்டு கோசாலைக்காரங்க. ரொம்ப நம்பிக்கையாக சொன்னதில், ஒப்பந்த சாகுபடிக்கு ஒத்துக்கிட்டேன்.எனக்கு மொத்தம் மூன்றேகால் ஏக்கர் நிலம் இருக்கு. இதில் வெள்ளைப் பொன்னி சாகுபடி செய்து கொடுத்தாங்க. முந்தைய ஆண்டுகளைவிட, போன ஆண்டு பூச்சித்தாக்குதல் குறைவாக இருந்தது. இரண்டு முறை மூலிகைப் பூச்சிவிரட்டி அடித்துக் கொடுத்தாங்க.. அதுவும் கட்டுப்பட்டது. பயிர் வளர்ச்சிக்காக பஞ்சகவ்யா. மீன் அமிலம் எல்லாம் தெளிச்சாங்க.ஏக்கருக்கு பதினைந்தரை மூட்டை மகசூல் கிடைத்தது. வழக்கமாக, ஏக்கருக்கு 30 முதல் 36 மூட்டை வரைக்கும் மகசூல் கிடைக்கும். போன சம்பா பருவத்தில், வறட்சி கடுமையாக இருந்ததுனால், ஒழுங்காக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் மகசூல் குறைந்திருக்கலாம். அடுத்தடுத்த ஆண்டு மகசூல் இன்னும் அதிகரிக்கும் என்று நம்பிக்கையாக இருக்கிறேன். போன சம்பாவில், ரசாயன விவசாயம் செய்தவர்களுக்கு ஏக்கருக்கு 5-8 மூட்டை வரைதான் மகசூல் கிடைத்தது. சிலருக்கு அதுவும் கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு கிடைத்த பதினைந்தரை மூட்டை …. இயற்கை விவசாயம் கொடுத்த வரம் என்றார் உணர்ச்சி பொங்க.நாமே தயாரிக்கலாம் பல்பொடி!ஒரு கிலோ தூய்மையான நாட்டுப்பசு  மாட்டுச்சாணத்தை. சுத்தப்படுத்தி சின்ன வறட்டிகளாக செய்து கொள்ள வேண்டும். 2 கன அடி   அளவில் குழி எடுத்து, அதன் தரைப்பகுதியில் இரும்பு வலையை வைத்து. அதன் மீது 30 கிராம் கற்பூரத்தை பற்ற வைத்து. அதன் மீது வறட்டிகளை அடுக்கி, ஒரு தகரத்தை வைத்து, காற்றுப் புகாமல் மெழுகிவிட வேண்டும். மறுநாள், வெந்தநிலையில் இருக்கும் வறட்டிகளை எடுத்து தூளாக்கி, சலித்து கொள்ள வேண்டும்.தும்பை பூ, வேப்பிலை, ஆலம் விழுதுகளை சமஅளவு எடுத்து, நன்குவெயிலில் காயவைத்து தூளாக்கிக் கொள்ள வேண்டும்.இந்தப் பொடி அரை கிலோ, கரித்தூள் அரை கிலோ, நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடிய கருப்பு நிறக் கல் உப்பு 10 கிராம், நாயுருவி இலைத்தூள் 10 கிராம் ஆகியவற்றுடன். சலித்து வைத்திருக்கும் வறட்டிப் பொடியையும் சேர்த்து, அரை லிட்டர் தண்ணீர்விட்டு, 10 நிமிடம் கொதிக்க வைத்து, கட்டியாகும் வரை கிளற வேண்டும். நன்கு ஆறிய பிறகு, 2 நாட்களுக்கு வெயிலில் காய வைத்துத் தூளாக்கினால்… ஆரோக்கியமான மணம் கமழும் இயற்கைப் பல்பொடி தயார். ஐம்பது கிராம் பல்பொடி. 25 ரூபாய் விலையில் விற்பனையாகிறது.அட இயற்கை விவசாய ஒப்பந்த சாகுபடிதிருவீழிமிழலை கிராமத்தைச் சுற்றியுள்ள விஷ்ணுபுரம், தேதியூர், நாலாங்கட்டளை, நல்லுச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் ஒப்பந்த முறையில் இயற்கை விவசாய சாகுபடியையும் கோசாலையினர் மேற்கொண்டு வருகிறார்கள். அதைப் பற்றிப் பேசிய குருபிரசாத், “ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் எங்களிடம் கொடுத்தால் நாங்களே விதைத்து, விளைய வைத்து, அறுத்து கொடுத்துவிடுவோம்.ஆரம்பத்தில் 7 ஆயிரம் ருபாய், அறுவடை முடிந்ததும் 5 ஆயிரம் ரூபாய் என்று பணத்தைக் கொடுத்தாலே போதும். இது, விவசாயிகளுக்கு பெரிய செலவாக தெரிவதில்லை. வேலையாள் தட்டுப்பாடு, இடுபொருள் செலவு, இயந்திரங்கள் தட்டுப்பாடு என்று எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாமல், அவங்க கைக்கு நெல்லு கிடைத்துவிடுகிறது.அண்டை போடுவதும், தண்ணீர் பாய்ச்சுவதும் மட்டும்தான் விவசாயிகளுடைய வேலை. மற்ற வேலைகளை நாங்களே பார்த்துக்கொள்வோம். போன சம்பா பருவத்தில் 45 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து கொடுத்தோம்.உழவு இயந்திரம், பாய் நாற்றங்காலுக்கு தேவையான விரிப்பு, நடவு இயந்திரம், களையெடுக்கும் கருவிகள் எல்லாமே நாங்கள் வைத்திருக்கிறோம். கோசாலையில் தயாரிக்கும் இடுபொருட்களையே பயன்படுத்திக் கொள்கிறோம். அறுவடையையும் நாங்களே செய்து கெடுத்துவிடுவோம். வைக்கோலை மட்டும் கோசாலைக்கு எடுத்துக் கொள்வோம். நெல்லை, அவங்களே எங்க வேண்டும் என்றாலும் விற்றுக் கொள்ளலாம். இயற்கை விவசாயத்தில் விளைவதால், இந்த நெல்லுக்கு கிலோவிற்கு சராசரியாக 18 ரூபாய் விலை கிடைக்கிறது. இந்த ஒப்பந்த சாகுபடிக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றார்.தொடர்புக்குகுருபிரசாத், செல்போன் : 94444 11772ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.06.13 www.vikatan.com

பச்சைத் தங்கத்தில் பொம்மை செய்வோம்

பச்சைத் தங்கத்தில் பொம்மை செய்வோம்



 
''மனிதனை நம்புறதைவிட மண்ணையும் மரத்தையும் நம்பலாம். இன்றைய சூழ்நிலையில் நெல், தென்னை விவசாயத்தைவிட மரம் வளர்ப்புலதான் கணிசமான லாபம். அதற்கு நானே சாட்சி'' என தன்னைச் சந்திப்பவர்களிடம் எல்லாம் பூரிப்போடு சொல்கிறார் ராமநாதன்.
பேராவூரணியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்று இருந்தேன். அங்கே  பலவிதமான மரக் கன்றுகளை இலவசமாகக்  கொடுத்துக்கொண்டு இருந்த ராமநாதனை நண்பர்கள் சிலர்  அறிமுகப்படுத்தினர்.
பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, பசுமையாகப் பேசத் தொடங்கினார். ''வானம் பார்த்த பூமியில் மரத்தை வளர்த்து, மழையை எதிர்பார்க்கிறேன். நான் மண்ணுக்குச் செய்றேன். மண் எனக்கு செய்யுது. பொது நலத்திலும் நான் நிறைவான வருமானத்தோடதான் வாழறேன், நீங்க நிச்சயம் என்னோட பசுமைத் தோட்டத்துக்கு வரணும்''  அன்புடன் அழைப்புவிடுத்தார்.
மறுநாள் மாலை நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஆஜரானேன். என்னை பார்த்ததும் முகமலர்ச்சியோடு வரவேற்றார்.  வீட்டின் முகப்பில் பசுமைத் தோட்டம் எனப் பெயரிடப்பட்டு இருந்தது. உள்ளே சென்றதும் ஏதோ காட்டுக்குள் நுழைந்த உணர்வு. பலவிதமான மரங்கள் ஒன்றை ஒன்று தழுவி கலப்படம் இல்லாத காற்றை வீசிக்கொண்டு இருந்தன.
''இந்த மரங்களாலதான் பிள்ளைகளோட திருமணத்தையே செஞ்சு முடிச்சேன். ஒரு ரூபாய் கடன் வாங்கலை. சொத்தில் ஒரு பிடி மண்ணை நான் விற்கலை. எல்லாம் மரம்தந்த வரம். மரம் வளர்ப்புல பலருக்கு விருப்பம் இல்லாம இருக்கக் காரணமே, உடனடியான பலன் எதுவும் கிடையாது என்கிற எண்ணம்தான். மற்ற விவசாயத்துல செலவுகள்போக கிடைக்கிற லாபத்தைவிட மரங்களால பலமடங்கு அதிகம். என்னை பார்த்து நிறையப்பேர் மரம் வளர்ப்புல இறங்கி இருக்காங்க. நானும் அவங்களுக்கு என்னால் முடிஞ்ச உதவிகள் செய்றேன்'' என்றார்.
தோட்டத்தைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினேன். ஆங்காங்கே பறவைகளுக்காக சிறிய தண்ணீ ர் தொட்டிகள் உள்ளன. அவைகள் மூலமாக, பல்வேறு மர விதைகள் கிடைத்தனவாம். '' இங்கே 120 வகையான மரங்கள் இருக்கின்றன. நம் மண்ணுக்கான மரங்கள் பலவற்றை நாம் புறக்கணிச்சுட்டோம். அதனால், நம் பழமையான மரங்களையும் தேடிக்கிட்டு இருக்கேன்'' என்றவர் ஒவ்வொரு மரத்தைப்பற்றியும் சொல்லி சிலிர்க்க ஆரம்பித்தார்.
''இந்த மரத்தின் பெயர் கருங்காலி. பச்சைத் தங்கம் என மர ஆர்வலர்கள் அழைப்பாங்க. இந்த மரத்தில்தான் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகள் செய்வாங்க. சாதாரணமாக, விளையாட்டுப் பொருட்களை புள்ளைங்க வாயில்வைக்கும். ஆனா,இந்த மரம், நோய் நீக்கி. அதனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இதோ... இந்த ஈர பலாமரக் காய்களைச் சமைச்சா, அசைவ கறிபோலவே இருக்கும். இதன் பெயர் பாம்பு கொல்லி. இந்த மரம் இங்கே கிடைக்காது. மலைப் பிரதேசங்கள்லதான் கிடைக்கும். இது இருக்கும் இடத்தைச்சுத்தி 100 அடி சுற்றளவில் எந்தப் பாம்புகளும் வராது. இரவு நேரத்துலகூட நான் பயம் இல்லாம தோட்டத்தைச் சுத்திவர இந்த மரம்தான் காரணம்.
குமிழ் மரம் ஆஸ்திரேலிய மரம். ஏழு ஆண்டுகள்ல வளர்ச்சி அடைஞ்சுடும். செயற்கை கை, கால்களை இதுலதான் செய்வாங்க. எடை குறைவானது. செஞ்சந்தன மரம் ஜப்பான் நாட்டுல பாதுகாப்புக்காகப் பயன்படுத்துறாங்க. இந்த மரத்தை ஊடுருவி அலைகற்றைகள் வர முடியாது. மகோகனி மரத்துலதான் வெள்ளை மாளிகை கட்டப்பட்டது. கொக்கு மந்தாரையும் அந்தி மந்தாரையும் பில்லி சூன்யம் நெருங்கவிடாம செய்யும்'' என விவரித்துக்கொண்டே சுற்றிக்காட்டினார். இங்கே வருடந்தோறும் வனத் துறையில் இருந்து மாணவர்கள் பயிற்சிக்காக வருவார்களாம்.
''எனக்கு பணத் தேவைகள் வரும்போது மரத்தை விற்றுவிடுவேன். அந்த இடத்தில் மரக் கன்று ஒன்றை உடனே நட்டுவைத்து விடுவேன். யாராவது மரம் வளர்க்க ஆசைப்பட்டால் சொல்லுங்கள். நான் அவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்'' என்ற ராமநாதன், கிளம்பும்போது சர்வ சுகந்தி மரத்தின் இலையைக் கொடுத்தார். '' நுகர்ந்து பாருங்கள்... தெய்வீக மணம்வரும். இரண்டு நாட்களுக்கு உடல் சுகந்தமாக இருக்கும்'' என வழி அனுப்பிவைத்தார்.
சட்டைப் பையில் இருந்த சர்வ சுகந்தி வாசனையில் மெய் மறந்தபடியே கிளம்பினேன்!
- சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்